பண முதலைகளுக்கு வங்கி கடன், இரும்புத்திரையில் மத்திய அரசின் தோலுரிக்கும் விஷால்.!

IMG-20180511-WA0312
Faceinews Logo - Copy
தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள இரும்புத்திரை இன்று உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் டிஜிட்டல் இந்தியா, ஆதார் கார்ட் ஆகியவற்றை பற்றியும் இதன் மூலம் மறைமுகமாக நடக்கும் சுரண்டல்களையும் ஊழல்களை பற்றியும் புட்டு புட்டு வைத்துள்ளார் விஷால்.
IMG-20180511-WA0175
அதுமட்டுமில்லாமல் வங்கி கடன் என்ற பெயரில் நீரவ் மோடி, விஜய் மல்லையா ஆகியோருக்கு கடன் கொடுத்து மக்களின் பணத்தை வீணடித்த மத்திய அரசின் உண்மை முகத்தை தோலுரித்துள்ளார்.
IMG-20180511-WA0317
அதேபோல் பண மதிப்பிழப்பு பிரச்சனையால் மக்கள் படும் பிரச்சனைகளை வெளிப்படையாக சுட்டி காட்டியுள்ளார். வங்கி கடன் என்பது ஏழை மக்களுக்கு எட்டா கனியாக இருப்பதை தோலுரித்து காட்டியுள்ளளார்.
இது போன்ற மத்திய அரசின் மோசடிகளை துணிச்சலாக எதிர்த்துள்ள விஷாலுக்கு பல்வேறு சமூக அமைப்புகள் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 இதனால் தமிழகம் முழுவதும் படம் ரிலீசாக கூடாது என பி.ஜே.பி கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அனைத்து தியேட்டர்கள் முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விஷாலின் இரும்புத்திரை படம் வெளியாகி வெற்றி கரமாக திரைக்கு வந்துள்ளது.
Faceinews.com