சென்னையில் தன்னிகரற்றமருத்துவமனையாக இயங்கி வரும் இண்டிகோ உமன்ஸ் சென்டர் மற்றும் கருதரிப்பு மையம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 13 ஆம் தேதி அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது

IMG_7246

 

Faceinews Logo - Copy

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 13 ஆம் தேதி அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டிமகளிர் நலம் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தி, சென்னையில் தன்னிகரற்றமருத்துவமனையாக இயங்கி வரும் இண்டிகோ உமன்ஸ் சென்டர் மற்றும் கருதரிப்பு மையம்(http://indigowomenscenter.com/)சிறப்பு சலுகையை அறிவித்திருக்கிறது.

ஒவ்வொரு பெண்களும் அவர்களின் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருப்பது அவர்கள்தாய்மையடைந்து, அன்னையராக மாறும் தருணத்தில் தான். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 13ஆம் தேதியன்று அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னையில் உள்ளஇண்டிகோ உமன்ஸ் சென்டர் மற்றும் கருதரிப்பு மையம் சார்பாக அன்னையர் தினம் சென்னை அண்ணாநகரில்உள்ள இந்த மருத்துவமனை வளாகத்தில் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இம்மருத்துவமனையின்நிர்வாக இயக்குநர் டாக்டர் சரத் பட்டினா(Dr.Sarath Battina), டாக்டர் சுரக் ஷி த் பட்டினா(Dr.Surakshith Battina) மற்றும்டாக்டர் ஸ்ரீலதா கன்கனாலா (Dr.Srilatha Kankanala)ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.

IMG_7258

முன்னதாக இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட டாக்டர் சரத் பட்டினா பேசுகையில்,‘ ஒவ்வொரு பெண்ணிற்கும் அவர்கள் தாய்மைஅடைவதில் உள்ள சிக்கல்களை நவீன பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து அவர்களை தாய்மை பேறுஅடைவதற்குரிய முழு தகுதியை உருவாக்குகிறோம். இதற்காக தேவைப்படும் அனைத்து மருத்துவஉதவிகளையும் நாங்கள் கடந்த 35 ஆண்டுகளாக வழங்கி வருகிறோம். நாங்கள் குழந்தையின்மைக்காகசென்னையில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் கடந்த ஒன்றரை ஆண்டு காலகட்டத்திற்குள்அனுமதிக்கப்பட்ட பெண்மணிகளில் நவீன மருத்துவ தொழில்நுட்பம் மூலம் 100 குழந்தைகளை பிரசவித்துசாதனைப் படைத்திருக்கிறோம். நாங்கள் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையுடன் இயற்கையான முறையில் கருத்தரிப்பை உறுதிச் செய்யக்கூடிய மருத்துவ சிகிச்சைகளையும் செய்து வருகிறோம். அதற்கானஆலோசனைகளையும் தம்பதிகளுக்கு வழங்கி வருகிறோம்.’ என்றார்.

இந்த மருத்துவமனையில் எண்டோகோப்பிக் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வரும் டாக்டர் சுரக்ஷி த்(Dr.Surakshith Battina) பட்டினா பேசுகையில்,‘ அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். 20 முதல் 25வயதிற்குட்பட்ட பெண்கள் திருமணமான பிறகு ஒராண்டு வரை இயற்கையான முறையில் தாம்பத்யம்மேற்கொண்டு தாய்மையடைவேண்டும். அது நிகழாத போது தாமதிக்காமல், இது குறித்து மருத்துவர்களிடம்சென்று ஆலோசனை பெறவேண்டும். அப்போது தான் அவர்களால் மகப்பேறின்மைக்கான காரணத்தைகண்டறிந்து அதற்குரிய சிகிச்சையை அளித்து, தாய்மைபேறை அடையவைக்க இயலும். அதே போலகருதரித்திருக்கும் பெண்களுக்கு பிரசவ காலங்களில் வலி தெரியாமல் இருக்க நவீன உத்தி ஒன்றுஅறிமுகமாகியிருக்கிறது. இதனை பயன்படுத்தி வலியில்லாமல் குழந்தையை பெற்றெடுக்க இயலும். இதன்மூலம் பிரசவ காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அளவற்ற இரத்த போக்கு கட்டுப்படுத்தப்படுவதுடன்,உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயத்தையும் முற்றாக தவிர்க்க முடியும். கருதரிக்கும் பெண்களுக்கு  அடிக்கடிகரு கலைதல் நடைபெற்றால், சற்று தாமதிக்காமல் உடனடியான மருத்துவர்களை சந்தித்து ஆலோசனைபெறுங்கள்.

நாங்கள் 2.5 கிலோ எடையுள்ள மிகப்பெரிய ஃபைப்ராய்ட் கட்டியை லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சைமூலம் அகற்றியிருக்கிறோம். அதே போல் அடிக்கடி கருகலைதல் நடைபெறும் பெண்களுக்கு லேப்ராகோப்பிக்உதவியுடன் நவீன மூறையிலான செர்விக்ஸ் ஸ்டிச் என்ற உத்தியை கையாண்டு, அவர்களின் கருகலைதலைதடுக்கிறோம்.

அத்துடன் நாங்கள் உடற்பருமனை குறைக்கும் பேரியாட்ரிக் ஆபரேசனையும் வெற்றிகரமாகமேற்கொள்கிறோம். அதே போல் காஸ்மெடீக் கைனகாலஜி துறையிலும் மகளிருக்காக சேவையாற்றிவருகிறோம்.’ என்றார்.

டாக்டர் ஸ்ரீலதா பேசுகையில்,‘ கருத்தரிக்கும் பெண்களுக்கும், கருத்தரிப்பில் சிக்கல் உள்ள பெண்களையும்நவீன பரிசோதனைகள் மூலம் அவர்களின் பிரச்சனையை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சையளிக்கிறோம்.குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்று நோய் விசயத்தில்அறிமுகமாகியிருக்கும் நவீன பரிசோதனை கருவிகளைக் கொண்டு பரிசோதித்து தீர்வளித்து வருகிறோம்.’என்றார்.

 

Faceinews.com