தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர், கழக பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட அரசு ஆணைப்பிறப்பித்திருப்பதை வரவேற்று அறிக்கை

DMDK - 2018-05-28 0001

Faceinews Logo - Copy

ஸ்டெர்லைட் ஆலையை மிகத்தாமதமாக மூடுவதாக அரசு வெளியிட்ட இந்த அரசானை, தாமதமாக வந்தாலும் இனிவரும் எதிர்காலக சந்ததிகளுக்கு பயனளிக்ககூடிய ஒரு ஆணையாக இருக்கும் என்பதை தேமுதிக வரவேற்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அனைத்து போராட்டகாரர்களுக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. மேலும் அணில்அகர்வால் அவர்கள் உச்சநீதிமன்றத்தின் மூலமாக வழக்கு தொடுத்து, மீண்டும் அனுமதி பெற்று ஆலையை திறப்பேன் என்று கூறியுள்ளார். எனவே நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்று வந்தாலும், ஆலையை திறப்பதற்குதமிழக அரசு அனுமதி வழங்ககூடாது.மாநில அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளுக்கு நீதிமன்றம் தலையிட முடியாத வகையில் அரசு ஆணைபிறப்பிக்கவேண்டும். அதேபோல் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கழிவுகளை அகற்றி சுத்தம்செய்யவேண்டும்.

DMDK - 2018-05-28 0002

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறித்தி தேமுதிக ஆரம்பத்தில் இருந்தே போராடியது, இது தேமுதிகவுக்கும், போராடிய மற்ற அனைத்து கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம். எனவே இத்தனை உயிர்களை இழந்தபிறகும், இத்தனை கலவரங்கள் ஆனாப்பிறகும், இப்பொழுதுதான் தூங்கிக்கொண்டிருந்து விழித்துக்கொண்டது போல அரசாங்கம் அறிவித்திற்கும் இந்த அறிவிப்பு என்பது, காலம்கடந்துசெயலாகஇருந்தாலும்ஒட்டுமொத்த மக்களும் வரவேற்கதக்கதாக தேமுதிக கருதுகிறது.எனவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்திருப்பதை தேமுதிக வரவேற்கிறது.

தேசிய முற்போக்கு திராவிட கழகம்

 

நிறுவனத் தலைவர் / கழக பொதுச்செயலாளர்

Faceinews.com