பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு நன்றி – நடிகர் ஆரி..!

hqdefault

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்துவதோ கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Faceinews Logo - Copy

இதில் பால் தயிர் எண்ணெய் மற்றும் மருத்துவ பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மற்ற பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கு நடிகரும் சமூக சேவகருமான ஆரி தனது நன்றியை தெரிவித்துள்ளார், இவர் பல வருடங்களாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என போராடியிருக்கிறார் குறிப்பாக தனது படபூஜை விழா மற்றும் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற உலக கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் அவர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் விழா ஏற்பாடு செய்திருக்கிறார் மற்றும் பல கல்லூரிகலில் விழிப்புணர்வும் செய்திருக்கிறார்.

எனவே தனது ஆசையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளதாக தமிழக அரசு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார் நடிகர் ஆரி…

Faceinews.com