குழந்தைகள் மற்றும் மணப் பெண்ணிற்கான நவநாகரீக ஆடை ‘டயாடெம்’

 
IMG_0748
Faceinews Logo - Copy
ஆச்சி குழுமத்தின் அடுத்த அறிமுகம்: டயாடெம் குழந்தைகள் மற்றும் மணப்பெண்களுக்கான கலாச்சார ஆடைகள்
 
IMG_0708
ஆச்சி மசாலாவிற்கு அறிமுகம் தேவையில்லை. சமையலறையில் அதிகளவு நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்த பெண்களின் மனித வள ஆற்றலை அவர்களின் சுய முன்னேற்றத்தின் பக்கம் திசை திருப்பிய நிறுவனம். அந்த குழுமத்திலிருந்து வெளிப்பட்டிருக்கும் முன்னூதாரண சாதனை பெண்மணி திருமதி ஷைனி சின்ட்ரெல்லா 
 
IMG_0702
‘ஆச்சி’ மசாலா நிறுவன உரிமையாளரின் மூத்த மருமகளான இவர் காருண்யா பல்கலைகழகத்தில் பொறியியல் பட்டதாரி படித்தவர். படிக்கும் காலத்திலிருந்தே பேஷன் மற்றும் புதுபுது டிசைன்களிலான ஆடை வடிவமைப்பின் மீது நாட்டம் கொண்டிருந்த இவர், பிறகு ‘டயாடெம் ’ என்ற வணிக முத்திரையுடன் கூடிய பேஷன் கலெக்ஷன் நிறுவனத்தைத் தொடங்கினார். 
 
IMG_0821
இதில் குழந்தைகள் மற்றும் மணப்பெண்களுக்கான நவநாகரீக ஆடைகளை புது புது பேஷன் டிசைன்களில் உருவாக்கி காட்சிப்படுத்தினார். அவருடைய இந்த டயாடெம் என்ற தர அடையாளம் தமிழகம் முழுவதிலுமுள்ள குழந்தைகளை ஈர்த்தது. இவர் வடிவமைத்த ஆடைகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதிலும் குறிப்பாக டபுள் லேயர்ட் பால் கவுன், கோல்டன் ஆரி வொர்க் ஹெவி பால் கவுன், கரேஜியஸ் கோல்டன் ஸ்பார்க்ள் பால் கவுன், ஹெவி ஆரி வொர்க்ட் ஆஃப் ஷோல்டர் பால் கவுன், ஹெவி ஸ்டோன் வொர்க் யோக் அண்ட் ரஃப்ல்ட் ஸ்கிர்ட் பால் கவுன் என எண்ணற்ற டிசைன்களிலான கவுன்களுக்கு குழந்தைகளிடைய பெரிய மவுசு ஏற்பட்டது. குழந்தைகளைக் கவரும் பல ப்ரத்யேக வண்ணங்களில் வடிவமைக்கப்பட்ட இந்த கவுன்கள் 800 முதல் 8,000 ரூபாய் வரை விலையில் கிடைக்கிறது என்பதே இதன் சாதகமான அம்சம்.
 
IMG_0711
 
இதன் பின்னணி மற்றும் வெற்றியின் ரகசியம் குறித்து அவர் பேசுகையில்,‘ இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கப்படவேண்டும். அவர்களின் கனவு நனவாக்குவதற்கான சூழலை உருவாக்குவதில் அக்கறை செலுத்தவேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறேன். அதில் என்னுடைய பங்களிப்பாக இத்தகைய நவீன ஆடைகளை வடிவமைத்து வருகிறேன். ஏனெனில் ஒவ்வொரு பெண் பிள்ளைகளும் தங்கள் அணிந்திருக்கும் புதிய வடிவிலான ஆடைகளின் மூலம் தன்னம்பிக்கையைப் பெறுகிறார்கள்.’ என்றார்.
 
IMG_0819
இவர் பெங்களூரூவிலுள்ள ஐ ஐ எம்மில் பேமிலி பிசினஸ் மேனேஜ்மெண்ட் என்ற பிரிவில் முதுகலை பட்டத்தைப் பெற்றிருக்கும் இவர், பேச்சு போட்டி, விவாதங்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பங்குபெறும் பல போட்டிகளில் நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டிருக்கிறார். ஃபேஸ்புக், ட்வீட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு, தன்னுடைய விருப்பத்தையும் எண்ணத்தையும் பகிர்ந்துகொண்டு வருகிறார். இவரின் இந்த ஈடுபாட்டிற்கு இவரின் கணவர் பேருதவியாக பின்னணியில் இருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் தன்னுடைய குடும்பத்தை நிர்வகிக்கும் இல்லத்தரசியாகவும் இருந்துவருகிறார்.
 
IMG_0712
தொடர்ந்து அவர் பேசுகையில், ‘டயாடெம் ’ என்ற தர அடையாளத்துடன் மணப்பெண்களுக்கான ஆடையையும், விருந்துகளில் கலந்துகொள்வதற்கான விசேடமான ஆடையையும் வடிவமைத்து வருகிறேன்.  இன்றைய தேதியில் இளம் பெண்கள் தங்களின் தோற்றம், தேர்ந்தெடுத்து அணியும் ஆடை ஆகியவற்றில் தங்களுடைய தனித்துவமான அடையாளம் வெளிப்படவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இவர்களின் எண்ணத்தை உணர்ந்தே வித்தியாசமான வண்ணங்களிலும், புதுபுது டிசைன்களிலும் ஆடைகளை வடிவமைக்கிறேன். இதை அணிந்து சென்ற பின் அவர்கள் தங்களுக்கு கிடைத்த பாராட்டை என்னுடன் பகிர்ந்துகொள்ளும் போது கிடைக்கும் மனநிறைவை விவரிக்க வார்த்தைகளேயில்லை.’ என்றார் திருமதி ஷைனி சின்ட்ரெல்லா
Faceinews.com