“நல்லதே நடக்கும்” சமூகநல அறக்கட்டளை சார்பாக பெற்றோரில்லா பிள்ளைகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது

IMG-20180725-WA0452

Faceinews Logo - Copy

“நல்லதே நடக்கும்” சமூகநல அறக்கட்டளை* சார்பில் 19 / 7 / 2018 வியாழக்கிழமை அன்று , திருவண்ணாமலை, கிரிவலப்பாதை, ஸ்ரீசீனிவாசா உயர்நிலைப்பள்ளியில் பெற்றோரில்லா பிள்ளைகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் என 68 மாணவர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது .

IMG-20180725-WA0253

இந்த நிகழ்ச்சியை சிறப்பான முறையில் செய்வதற்காக களப்பணி ஆற்றிய மாவட்ட பொருப்பாளர்களுக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் .
இதற்காக நன்கொடையளித்து உதவிய அனைவருக்கும் நல்லதே நடக்கும் சமூகநல அறக்கட்டளை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதில் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஜி.கே.சாமி தலைமை வகித்தார். அறக்கட்டளை நிறுவன செயலாளர் எஸ்.விஜயகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் சுமித்ரா முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை நிறுவன பொருளாளர் ராஜேஷ் வரவேற்றார்.

IMG-20180725-WA0252

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ / மாணவிகளுக்கு தட்டு, நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில், மாணவ / மாணவிகளுக்கு யோகா மற்றும் தியானம் செய்வதகான பாய் ஆகியவை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை மாநில நிர்வாகிகள் தி ஃபேஸ் நியுஸ் நிருபர் மாதவன் பிரிண்ட்ஸ் சி.முருகன், சரவணன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கோபால், லோகநாதன், எழில்மாறன், பள்ளி ஆசிரியர்கள் காண்டீபன்,  பிரபு, ராஜீவ்காந்தி, சரஸ்வதி, பிரேமலதா மற்றும் மாணவ / மாணவிகள் கலந்து கொண்டனர். ரேகா அருண் நன்றி கூறினார்.

Faceinews.com