ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அமைந்துள்ள அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் கடந்த 50 நாட்களில் 2010 நபர்கள் பயன் மக்கள் நல்வாழ்வுத் துறை ! அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தகவல் !

IMG-20180731-WA0241

Faceinews Logo - Copy

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அமைந்துள்ள அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் கடந்த 50 நாட்களில் 2010 நபர்கள் பயன் மக்கள் நல்வாழ்வுத் துறை ! அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தகவல் !

IMG-20180731-WA0239

இன்று (31.07.018) சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உள்ள அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் இரத்த வகை கண்டறியும் அதிநவீன கருவியினை (ஹரவடிஅயவநன க்ஷடடிடின ழுசடிரயீ ஹயேடலணநச) மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் துவக்கி வைத்தார். பின்னர் பேசிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மாண்புமிகு அம்மாவின் அரசில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட அம்மா முழு உடல் பரிசோதனை மையம் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இம்மையத்தில் கடந்த 50 நாட்களில் 2010 நபர்கள் பரிசோதனை செய்து பயனடைந்துள்ளனர். மேலும் இம்மையத்தினை வலுசேர்க்கம் வகையில் இன்று 4 இலட்சம் ரூபாய் மதிப்பில் இரத்த வகை கண்டறியும் அதிநவீன கருவி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கருவியின் மூலம் 9 நிமிடத்தில் 12 நபர்களுக்குண்டான இரத்த பிரிவுகளை கண்டறிய முடியும். மேலும், அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்ததில் 177 நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தமும், 355 நபர்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பும், 4 நபர்களுக்கு இருதயம் சம்பந்தப்பட்ட நோய் பாதிப்பு, 14 நபர்களுக்கு தைராய்டு பாதிப்பு, 23பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் அறிகுறிகள், 17 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அறிகுறிகள், 11 நபர்களுக்கு பித்தப்பையில் கல் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது. இதில் மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்ட பெண்ணுக்கு இம்மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் உள்ளார். மேலும், இதுபோன்ற மையங்கள் சேலம், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விரைவில் தொடங்கப்படும். மேலும், படிப்படியாக இதுபோன்ற மையங்கள் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் விரிவுபடுத்தப்படும். மேலும் தமிழகம் முழுவதும் 410 அரசு மருத்துவ நிலையங்களில் அம்மா ஆரோக்கியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 41.47 இலட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தில் 25 பரிசோதனைகள் கட்டணமில்லாமல் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தாமாகவே முன்வந்து அனைத்து பரிசோதனைகளையும் அரசு மருத்துவமனைகளில் செய்து நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நலவாழ்வு பெறவேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. நாராயணபாபு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Faceinews.com