15 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் ரூ.1.5 கோடி மதிப்பில் உயிர் காக்கும் தாய்ப்பால் வங்கிகள் இந்த ஆண்டு விரிவுபடுத்தப்படும் ! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தகவல் !!

IMG-20180801-WA034615 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் ரூ.1.5 கோடி மதிப்பில் உயிர் காக்கும் தாய்ப்பால் வங்கிகள் இந்த ஆண்டு விரிவுபடுத்தப்படும் ! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தகவல் !!

IMG-20180801-WA0342

இன்று (01.08.2018) சென்னை எழும்பூர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் உலக தாய்ப்பால் வார துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் தாய்ப்பால் விழிப்புணர்வு குறித்த ரங்கோலி, சுவரொட்டிகள் மற்றும் ஸ்லோகனை பார்வையிட்டு, வண்ண பலூன்களை பறக்கவிட்டார். இதனைத் தொடர்ந்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தாய்ப்பால் விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டு தாய்ப்பாலின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியினை ஏற்றனர். பின்னர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உலகத் தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டிற்கான கருப்பொருள் – “தாய்ப்பால் ஊட்டுதல் வாழ்க்கையின் அடித்தளம்” குறைந்தபட்சம் 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். முதல் ஆறுமாதங்கள் தாய்ப்பாலை மட்டுமே கொடுக்க வேண்டும்.  சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை பிரசவம் எதுவாயினும் தாய்ப்பாலை உடனே புகட்ட வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதனால் தாயின் மார்பக மற்றும் சினைப்பை புற்றுநோயினை தடுக்கும். பிறந்த சிசுவிற்கு சீம்பாலே இயற்கையான முதல் தடுப்பு மருந்தாகும். தமிழகத்தில் வருடத்திற்கு 10 இலட்சம் பிரசவங்கள் நடக்கின்றன. இவற்றில் 99ரூ பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. தஞ்சாவூர், மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மற்றும் திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஆகிய 9 மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகிறது. உதகமண்டலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், கும்பகோணம், கோவில்பட்டி, பெரம்பலூர், விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் தென்காசி ஆகிய 15 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ரூ.1.5 கோடி மதிப்பில் பச்சிளம் குழந்தைகளின் உயிர் காக்கும் தாய்ப்பால் வங்கிகள் இந்த ஆண்டு விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 23.06.2018 அன்று தாய்ப்பால் வங்கி தொடங்கி வைக்கப்பட்டது. இதுவரை 14530 தாய்மார்கள் தாய்ப்பால் தானம் வழங்கியுள்ளனர். 12316 குழந்தைகள் தாய்ப்பாலை தானமாக பெற்றுள்ளனர். மேலும், 352 பேருந்து நிலையங்கள் மற்றும் முனையத்தில், பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனிமையில் பாலூட்டுவதற்காக பாதுகாப்பான தனி அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார். இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நா. பாலகங்கா எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தலைவர் திரு. வி.எம். முரளிதரன், முதல்வர் (பொ) திருமதி எஸ். புவனேஸ்வரி, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. ஜெயந்தி, சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் மரு. அரசர் சிராளன், மரு. சீனிவாசன், உயர் அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Faceinews.com