தரகன் சினிமாஸ் சார்பாக ஹன்ஸிபாய் தயாரிப்பில் “பேய் எல்லாம் பாவம்”

IMG-20180803-WA0466
தரகன் சினிமாஸ் சார்பாக ஹன்ஸிபாய் தயாரிப்பில் “பேய் எல்லாம் பாவம்”
Faceinews Logo - Copy
ஒரு வீட்டில் நடக்கும் பேய்களை பற்றிய காமெடி திரில்லர் படம் தான் “பேய் எல்லாம் பாவம்”. பேய் படங்களுக்கு என ஒரு ஃபார்முல தமிழ் சினிமாவால் இருக்கிறது. பேய் என்றால் இருட்டில் வரும், வெள்ளை துணி போட்டிருக்கும் என விதவிதமான பேய் படங்களை பார்த்திருக்கிறோம். இதிலெல்லாம் மாறுபட்டு தமிழ்சினிமாவில் கலகலப்பாகவும், சீனுக்கு சீன் சிரிக்கும் படியும் ஒரு பேய் படம் உருவாகி இருக்கிறது அதுதான் பேய் எல்லாம் பாவம். இந்த படத்தில் பேய் ஆம்லெட் போடுவது மாதிரியும், தண்ணியடிப்பது மாதிரியும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது.
புதுமுகம் அரசு கதாநாயகனாகவும், கேரள புதுவரவு டோனா சங்கர் கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் காமெடியில்  அப்புக்குட்டி, கதகளி படத்தில் போலீஸ் வேடத்தில் மிரட்டிய ஸ்ரீஜித் ரவி, தர்ஷன், சிவக்குமார், ரசூல் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு பிரசாந்த், எடிட்டிங் அருண்தாமஸ், மக்கள் தொடர்பு ராஜ்குமார், கதை, திரைக்கதை, வசனம் தவமணி பாலகிருஷ்ணன், இயக்கம் தீபக் நாராயணன்
Faceinews.com