“திரைப்பட்டறை” நடத்தும் யங் இளைஞர் “திரைப்பட்டறை ராம்”

IMG-20180806-WA0306

Faceinews Logo - Copy

“திரைப்பட்டறை ராம்”

மிகச்சிறந்த கலைஞர் பாரதிமணியின் “சென்னை அரங்கம்” நாடகக் குழுவில் பயிற்சி பெற்றவர் ராம். சென்னையில் மிக குறுகிய வயதில் “திரைப்பட்டறை” நடத்தும் யங் இளைஞர். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கான தனித்துவமான நடிப்பை வெளிக்கொணர்வதில் திரைப்பட்டரையின் பங்கு மிக முக்கியமானது.

IMG-20180806-WA0307

நடிப்பு மட்டுமின்றி பறையிசை, சிலம்பம், தேவராட்டம், கரகாட்டம், நாட்டுப்புற கலைகள், மரபு விளையாட்டுக்கள், பொம்மலாட்டம், திறன் வளர்ப்பு வகுப்புகள், பாவனை நாடகங்கள், ஸ்டோரி டெவலப்பிங், என அனைத்தையும் ஒரே இடத்தில் கற்றுக்கொடுப்பது திரைப்பட்டரையின் கூடுதல் சிறப்பு.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதிருந்து எப்போதும் நாடகத்தின் மீது எனக்கு பெரும் காதல். படிப்பு முடிந்தவுடன் பாரதிமணி சாரின் “சென்னை அரங்கம்” குழுவில் இணைந்து கொண்டேன்.

IMG-20180806-WA0305

விழிப்புணர்வு வீதி நாடகங்கள், மேடை நாடகங்கள் என சுமார் நாற்பது நாடகங்களை அரங்கேற்றம் செய்துள்ளேன். ஒரு முறை எம்.ஜி.ஆர் ஜானகி ஸ்கூலில் நடைபெற்ற நாடகத்தை பார்க்க சமுத்திரகனி வந்தார். என் நடிப்பை ரொம்ப ரசித்தவர் “போராளி” படத்தில் அறிமுகப்படுத்தினார்.

IMG-20180806-WA0304

சமுத்திரகனி மூலம் சசிகுமார் நல்ல பழக்கம் ஏற்பட்டது அவர் சுந்தரபாண்டியன் படத்தில் ஒரு நல்ல கேரக்டர் கொடுத்தார். அதனை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் அட்டக்கத்தி படத்தில் தினேஷ் நண்பனாக படம் முழுக்க என் கேரக்டர் பேசும் படியாக அமைந்தது. தற்போது பா.விஜய் நடிக்கும் “தகடு தகடு” படத்தில் படம் முழுக்க வர்ற மாதிரி ஒரு கேரக்டர். அந்த கேரக்டர் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான ஜீனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 1, சீசன் 2 மொத்தம் 40 எபிஷோட்கள் வெளியானது. இதற்கு முழு ட்ரைனெப் நானும், என் திரைப்பட்டறை குழுக்கலும். ஜீனியர், சீனியர் குழந்தைகள் ஷோவுக்கும் ட்ரைனிங் பண்ணினேன். இதுவரை இங்கே பயிற்சி எடுத்த 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் டிவி ஷோக்களில் தங்களின் திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்கள். இதுவே திரைப்பட்டரையின் தனித்த அடையாளம்.

தூரல் நின்னு போச்சு, அந்த ஏழு நாட்கள் படங்களை காமெடி வடிவில் சின்ன பசங்களை வைத்து கலாய்க்கும் ஷோவை பார்த்த பாக்யராஜ் சார் நேரில் கூப்பிட்டு பாராட்டினார்.

ஒரு நடிகனுக்கு உடம்பும், மனதும் ரொம்ப ரொம்ப முக்கியம் அதைவிட முக்கியம் பாவனைகள் அதை ஒழுங்கு பட செய்தாலே சினிமாவில் பெரிய உயரங்களை அடையாளம் என கூறுகிறார் திரைப்பட்டரை ராம். இங்கே பயிற்சி எடுக்கும் புதியவர்களுக்கு இவரே திரைப்படங்களில் நடிக்கவும் சொல்லி அனுப்புகிறார். மக்கள் தொடர்பாளர் ராஜ்குமார்.

 

Faceinews.com