பி.எஸ்.என்.எல்.-ன் “ஃப்ரீடம் ஆஃபர் –சோட்டா பேக்” அறிமுகம்.

bsnl-759151

Faceinews Logo - Copy

எதிர்வரும் 72-ஆவது சுதந்திர தினத்தையொட்டி பொதுத் துறை நிறுவனம் பி.எஸ்.என்.எல். சுதந்திரத்தினச் சலுகைகளாக “சோட்டா பேக்”-கை தனது மொபைல் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இவை நிறைந்த மதிப்புடன் குறைந்த விலையில் கிடைப்பதால், தினசரி வருமானம் ஈட்டும் வாடிக்கையாளர்க்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.  குறிப்பாக கிராமப்புறம், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகர்புறங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு  அளவற்ற வாய்ஸ் அழைப்புகள், இலவச டேட்டா, இலவச குறுஞ்செய்திகள், மற்றும் ரிங்பேக் டோன் முதலிய வசதிகள் கிடைக்கின்றன.  வரும் 10.08.2018 முதல் அகில இந்திய அளவில் நடைமுறைக்கு வருகிறது.

இச்சுதந்திர தின சிறப்புச் சலுகை 10.08.2018 முதல் 25.08.2018 வரை ரூ. 29-க்கு சிறப்பு கட்டண வவுச்சரை (STV) அறிமுகம் செய்துள்ளது. அனைத்து நெட்வொர்க், ரோமிங் உட்பட (மும்பாய் & தில்லி தவிர) அன்லிமிட்டெட் வாய்ஸ் அழைப்புகள், அன்லிமிட்டெட் டேட்டா (தினந்தோறும் 2GB வரை அதிவேகம்), தினமும் 100 எஸ்.எம்.எஸ் மற்றும் இலவச ரிங் பேக் டோன், பாட்டை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றம் செய்யும் வகையிலும், 7 நாட்கள் வேலிடிட்டி காலம் கொண்ட இந்த “வாராந்திர பேக்” கிடைக்கும்.

25.08.2018-க்கு பிறகு இந்த காம்போ வவுச்சரை பயன்படுத்துவோருக்கு அனைத்து நெட்வொர்க், ரோமிங்கிலும் (மும்பாய் & தில்லி தவிர) அன்லிமிட்டெட் வாய்ஸ் அழைப்புகள், 1GB டேட்டா, 300 எஸ்.எம்.எஸ் மற்றும் இலவச ரிங் பேக் டோன் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யும் வகையிலும், 7 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த “வாராந்திர பேக்” கிடைக்கும்.

இதைப்போலவே, ரூ.9/- டெய்லி பேக் அன்லிமிட்டெட் வாய்ஸ் ப்ளான் உள்ளது.  10.08.2018 முதல் 25.08.2018 வரை அன்லிமிட்டெட் வாய்ஸ் அழைப்புகள் அனைத்து நெட்வொர்க் ரோமிங் உட்பட (மும்பாய் + தில்லி தவிர), அன்லிமிட்டெட் டேட்டா (2GB-வரை அதிவேகம்), 100 எஸ்.எம்.எஸ் ஒரு நாள் வேலிடிட்டியுடன் “டெய்லி பேக்”-ஆக கிடைக்கும்.   28.08.2018 க்குப் பிறகு வாடிக்கையாளர்களுக்கு குறைக்கப்பட்ட டேட்டா மற்றும் ஏனைய சலுகைகளுடன் கிடைக்கும்.

சுதந்திரதினத்தையொட்டி, சோஷியல் மீடியாவில் பி.எஸ்.என்.எல் பல்வேறு போட்டிகளை நடத்துகிறது..  “தேசியக்கொடியுடன் கூடிய சிறந்த புகைப்படம்” மற்றும் “சிறந்த சுதந்திரதின முழக்கத்துக்கான சன்மானம் கொடுக்கப்படுகிறது என திரு. அநுபம் ஸ்ரீவத்ஸவா, தலைமை நிர்வாக இயக்குனர் பி.எஸ்.என்.எல்.,புதுதில்லி அவர்கள் தெரிவித்தார். அனைத்து பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களையும், நாட்டின் அனைத்து மக்களையும் இதில் பங்குகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

Faceinews.com