நியுஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை “கேள்வி நேரம்” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

Nelson

Faceinews Logo - Copy

இதில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டுஅன்றைய தினத்தின் முக்கிய அரசியல் திருப்பங்களை கொண்டு விவாதிக்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் விவாதத் தலைப்புகள் பெரும்பாலும் ஆக்கபூர்வமானவையாகவும் சமூகத்திற்குப் பயன்படுபவையாகவும் உள்ளன. அன்றைக்கு மக்கள் மனதில் சமூகம் சார்ந்து என்ன கேள்வி எழுகின்றதோ அதுவே தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றது. மக்கள் தலைவரின் நிலைப்பாட்டை அறியவும், தலைவர்கள் மக்களின் நிலையை அறியவும் இந்த விவாதங்கள் பாலமாகச் செயல்படுகின்றன.

vijayan

அரசியல்வாதிகளிடம் மக்கள் கேட்க எண்ணுகிற கேள்விகளை கேட்கும் களமாக நியுஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின்  “கேள்வி நேரம் பெரும்பங்காற்றுகிறது . இந்த நிகழ்ச்சிக்கு பொது மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியை நெல்சன், விஜயன் மற்றும்  சுகிதா நெறிப்படுத்துகின்றனர். ​

 

Faceinews.com