லிப்ரா ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ எனும் நிறுவனத்தைத் தொடங்கி, இளம் பரத நாட்டிய கலைஞர் ஸ்ருதி சேகருக்கு முதல் மேடையை அமைத்துக் கொடுத்துள்ளார்

7H7A9141
Faceinews Logo - Copy
லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், இப்பொழுது தனது கரங்களை சினிமாவுக்கு வெளியே பிற கலைகளுக்குமாக நீட்டியிருக்கிறார்.
இதற்காகவே பிரத்யேகமாக ‘லிப்ரா ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ எனும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ள அவர், இளம் பரத நாட்டிய கலைஞர் ஸ்ருதி சேகருக்கு முதல் மேடையை அமைத்துக் கொடுத்துள்ளார்.
7H7A9143
நிருத்ய சுதா  நடனம் மற்றும் இசைப்பள்ளியை நடத்திவரும் சுதா விஜயகுமாரின் மாணவியான ஸ்ருதி சேகரின் நடனம் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது என்றால் அது மிகையல்ல.
7H7A9205
சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட கலைமாமணி ஷோபனா ரமேஷ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பத்திரிக்கையாளர் டி எஸ் ஆர் சுபாஷ், நடிகர் ராகவ் அவரது மனைவி பிரிதா ஆகியோர் கலந்து கொண்டு ஸ்ருதி சேகரின் நடனத்தை வெகுவாகப் பாராட்டினார்கள்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் அவர்களின்  பெற்றோர் சந்திரசேகர் மற்றும் வனிதா சந்திரசேகர், நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினர்.
Faceinews.com