ஆக்சன் ஹீரோவாக வேண்டும் – நடிகர் வின்ஸ்குமார்

WhatsApp Image 2018-09-13 at 14.21.41

Faceinews Logo - Copy

தமிழ் திரையுலகில் எத்தனையோ புதுமுக நடிகர்கள் தினந்தோறும் அறிமுகமாகிறார்கள். ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே வெற்றிப்பெறுகிறார்கள். அந்த சிலரின் பட்டியலில் இடம்பிடித்துவிட போராடும் பலரில் வின்ஸ்குமாரும் ஒருவர். கப்பல் படையில் விமானத்துறையில் பணியாற்றியவர் . தற்போது திரைதுறையில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ‘போலீஸ் வலை’ என்ற படத்தின் படபிடிப்பின் போது அவரைச் சந்தித்தோம்.

    நடிகரானதன் பின்னணி குறித்து..? 


மார்த்தாண்டம் (கன்னியாகுமரி மாவட்டம்)அருகே உள்ள S.T மாங்காடு கிராமத்தில் பிறந்தேன்  . நடிப்பின் மீதான ஆர்வத்தின் காரணமாக மும்பையில் கப்பற்படையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது விடுமுறை தினங்களில் மாடலிங்கில் ஈடுபட்டேன். பதினைந்து ஆண்டு காலம் கப்பற்படையில் பணியாற்றிவிட்டு, ஒய்வுபெற்ற பின் நடிப்பின் மீதுள்ள ஆர்வம் குறையாமல் இருந்ததால் நடிகரானேன்.

WhatsApp Image 2018-09-18 at 18.14.12

நடிகராகுவதற்கு எப்படி தயார்படுத்திக் கொண்டீர்கள்?

கப்பல் படையில் பணியாற்றியதால் விளையாட்டு துறையில் ஆர்வம் அதிகம். நீச்சல் போன்ற சாகச பயிற்சிகளையும் எடுத்திருக்கிறேன். தமிழ், ஹிந்தி, மலையாளம்,ஆங்கிலம்  உள்ளிட்ட பல மொழிகளில் பேசவும் தெரியும். ஜேம்ஸ்பாண்ட், ஜாக்கிசான் படங்களை விரும்பி பார்ப்பேன். பாடுவதற்கும், நடனமாடுவதற்கும் பயிற்சி எடுத்திருக்கிறேன். 

முதல் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

இயக்குநர் நிஸார் இயக்கிய ‘லாஃபிங் அபார்ட்மெண்ட் ’என்ற மலையாளப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகராக அறிமுகமானேன். பிறகு காத்தவராயன் , காந்தர்வன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சலங்கை துரை இயக்கத்தில் நடிகை கஸ்தூரி நடிப்பில் உருவாகி வரும் ‘போலீஸ் வலை ’ என்ற தமிழ் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறேன்.

அடுத்து…?

எனக்கு ஆக்சன் காட்சிகளில் நடித்து காமெடி வித் ஆக்சன் ஹீரோவாக மிளிரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. தமிழ் ரசிகர்களும், இயக்குநர்களும் எனக்கு வாய்ப்பளித்தால் கலைசேவை செய்ய தயாராகவேயிருக்கிறேன்.
Faceinews.com