தமிழக வணிகர் சம்மேளனத்தின் முக்கிய நிர்வாகிகள் கருத்தரங்கம் நடைப்பெற்றது

IMG_20180929_203645

Faceinews Logo - Copy

திரு. வரதன் ஆறுமுகம் நிறுவனத் தலைவராக 2013 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தமிழக வணிகர் சம்மேளனத்தின் முக்கிய நிர்வாகிகள் கருத்தரங்கம் 29/09/2018, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நம்ம வீடு வசந்த பவன், 100 அடி சாலை, வடபழனி, சென்னையில் நடைப்பெற்றது.

IMG-20180930-WA0231

மதிஒளி ராஜா பிலிம்ஸ் உரிமையாளர் திரு. மதிஒளி ராஜா அவர்களுக்கு தமிழக வணிகர் சம்மேளனத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருக்கான பொறுப்பு நியமன சான்றிதழ் வழங்கப்பட்டது.

IMG-20180929-WA0370

இக்கருத்தரங்கத்தில், தமிழக வணிகர் சம்மேளனத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்தும், சம்மேளனத்தின் உறுப்பினர்களின் வியாபார அபிவிருத்தி குறித்தும் கந்தாலோசிக்கப்பட்டது. நிர்வாகிகளிடம் நிர்வாக சீரமைப்புகாக நிறை மற்றும் குறைகளை கேட்டறிந்து குறிப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

IMG-20180929-WA0410

முக்கிய நிர்வாகிகளுக்கு பொறுப்பு நியமன சான்றிதழ் வழங்கி கொளரவிக்கப் பட்டது. தமிழக வணிகர் சம்மேளன அமைப்பின் ஆலோசகர் திரு. டாக்டர். KRK நிர்வாகிகளுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். இந்த கருத்தரங்கத்திற்கு 50க்கும் மேற்ப்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

IMG-20180929-WA0368

அக்டோபர் மாதம் 12ந் தேதி முதல் 14ந் தேதி வரை பாண்டிச்சேரியில் நடைப்பெறவிருக்கும் ” ஐந்தாவது உலக தமிழர் பொருளாதார மாநாடு ” தமிழக வணிகர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பதால் தமிழக வணிகர் சம்மேளனம் தன் உறுப்பினர்களுக்கு பாண்டிச்சேரி மாநாட்டின் சிறப்பு அம்ச விழிப்புணர்வு விளக்கத்தை பாண்டிச்சேரி மாநாடு ஏற்பாட்டாளர்கள் திரு. CBCID நாஞ்சில் தாம்சன், திரு. C.N.இரமேஷ், சட்டகதிர் ஆசிரியர் டாக்டர் VRS. சம்பத், சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் முத்துவேல் ஆகியோர் கலந்துக் கொண்டு மாநாட்டின் முக்கியத்துவம் என்ன என்பதை விவரித்தனர். அச்சமயத்திலேயே, சில நிர்வாகிகள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கட்டடணத் தொகையையும் செலுத்தி மாநாட்டில் பங்குப்பெறும் வாய்ப்பை பெற்றனர்.

IMG-20180929-WA0365

இந்த கருத்தரங்கத்தில், சம்மேளனத்தின் நிர்வாகி திரு. வெற்றிக்குமரனின் மகன் மாஸ்டர் V.சேரன் அவர்களின் பிறந்தநாள் விழாவும் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

IMG-20180929-WA0376

இந்நிகழ்ச்சியின் நிறைவில், தமிழக வணிகர் சம்மேளனத்தின் மாநிலப் பொருளாளர் திரு. டில்லிபாபு நன்றியுரை வழங்கினார்.

Faceinews.com