சத்தியம் தொலைக்காட்சி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு உழவன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது

 
Yogesh-1
Faceinews Logo - Copy
                                                                 ‘உழவன்’
 
சத்தியம் தொலைக்காட்சி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு உழவன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது..
 
உழவு தொழிலே எல்லா தொழிலுக்கும் தலையானது என்பார்கள். ஆனால் உழவு தொழில் இன்று தோய்ந்து வருகிறது என்றே சொல்லலாம். இருந்தும், பல இளைஞர்கள் உழவில் கால் வைத்துள்ளனர். அந்த வகையில் உழவு தொழிலில் சாதிக்கதூண்டுபவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்தி, வெளியுலகத்துக்கு தெரியும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைகிறது. 
 
இந்த நிகழ்சியில் விவசாயம் சார்ந்த பிரச்சனைகள், கால்நடைகள், மரங்களின் வகைகளின் அவசியங்கள், பயிர் வகைகள், செடிகளின் தன்மைகள் அவற்றின் மகத்துவம், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹைபிரிட் விதைகள், மண் விளைச்சல்களுக்கு உகந்தது எது?, எது போன்ற உரங்களை பயன்படுத்தலாம் என அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வருகிறது
 
 
மேலும் உழவு தொழிலில் சாதித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளையும் அவர்களின் யுத்திகளையும் நாம் இந்த நிகழ்ச்சியில் பதிவு செய்யப்படுகிறது .இந்த நிகழ்ச்சியை யோகேஷ் தொகுத்து வழங்குகிறார்..
Faceinews.com