வேந்தர் தொலைக்காட்சியில் முழுக்க முழுக்க இளைஞர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி தான் ‘நாலு பொண்ணு ஒரு பையன்’

Naalu paiyan Oru ponnu 7

                                                               ‘நாலு பொண்ணு ஒரு பையன்’
                                            (வாரந்தோறும் சனிக்கிழமை 8.3 மணிக்கு)
Faceinews Logo - Copy

வேந்தர் தொலைக்காட்சியில் முழுக்க முழுக்க இளைஞர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி தான் ‘நாலு பொண்ணு ஒரு பையன்’.. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக நான்கு பெண்கள் பங்கேகின்றனர்.. அவர்களுக்கு சுவாரஸ்யமான நான்கு சுற்று போட்டிகள் நடத்தப்படும்.

முதல் சுற்று ‘தில் இருந்தா ரவுண்ட்ல நில்லு’. இந்த சுற்றில் ஒரு வட்டம் ஒன்று சுற்றிக்கொண்டு இருக்கும். அதன்மேல் நின்றபடி இந்த நால்வரும் நடனமாட வேண்டும்.. அதில் இருந்து தவறி விழுபவர்கள் இந்த சுற்றில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அவர்களுக்கான மதிப்பெண்களும் குறையும்.

Naalu paiyan Oru ponnu 2

இரண்டாவது சுற்று ‘இச்சு இச்சு இச்சுக்கொடு’. ஒரு பலகையில் நான்கு நடிகர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருக்கும். போட்டியாளர்கள் ஒவ்வொருவரின் இடுப்போடு கயிறு கட்டப்பட்டு கயிற்றின் மறுமுனை சற்று தள்ளி அங்கிருக்கும் ஒரு பயில்வானின் இடுப்பில் கட்டப்பட்டிருக்கும். போட்டியாளர்கள் தங்கள் பலத்தை உபயோகித்து கையிற்றை இழுத்தபடி பலகையில் ஒட்டப்பட்டுள்ள நாயகர்களுக்கு முத்தம் கொடுக்கவேண்டும்.. ஒவ்வொருவரும் எத்தனை முத்தம் கொடுக்கிறார்கள், யார் அதிகப்படியான நாயகர்களுக்கு முத்தம் கொடுக்கிறார்கள் என்பதை வைத்து போட்டியின் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்..

மூன்றாவது சுற்று உஷாரய்யா உஷாரு. இதில் ஒரு பொம்மையும் மூன்று பையன்களும் வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருப்பார்கள்..  கண்கள் கட்டப்பட்ட நிலையில் போட்டியாளர் அந்த பொம்மையை மட்டும் சரியாக கண்டுபிடித்து தொடவேண்டும்.. தவறி பையன்களில் யாரைவது தொட்டால் அவர்கள் போட்டியாளரின் கையை பிடித்துக்கொள்வார்கள்.

நான்காவது சுற்று முடிஞ்சா பதில் சொல்லு.. ஒரு சிறிய தொட்டியில் தண்ணீரில் மிதக்கும் நெல்லிக்காயை, போட்டியாளர் தனது வாயால் கவ்வி எடுக்கவேண்டும். பின் தொகுப்பாளர் சொல்லும் ஒரு புகழ்பெற்ற வசனத்தை நெல்லிக்காயை வாயில் வைத்தபடியே சொல்லவேண்டும். இரண்டையும் சரியாக செய்வரே போட்டியின் வெற்றியாளர்.

இந்த நான்கு சுற்றுகளுமே இளம் தலைமுறையினரை உற்சாகப்படுத்தும் விதமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் அமுதவாணன் கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நடத்தி வருகிறார்..

முற்றிலும் புதிய பாணியில் கிரியேட்டிவாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதால் மக்கள் மத்தியில் இது ரொம்பவே பிரபலமாகியுள்ளது. வேந்தர் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனிக்கிழமை 8.3௦ மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

Faceinews.com