வேந்தர் தொலைக்காட்சியின் நடுவர் இயக்குனனரும் நடிகருமான கே.பாக்யராஜ் தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் – ‘பண்டிகைகளை சிறப்பிப்பது பணமா..? உறவா..?

9

Faceinews Logo - Copy

வேந்தர் தொலைக்காட்சியின் தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் ‘பண்டிகைகளை சிறப்பிப்பது பணமா..? உறவா..?

தீபாவளி என்றாலே புத்தாடை பட்டாசு, பலகாரம் இவற்றுடன் பட்டிமன்றமும் ஒரு தவிர்க்கமுடியாத அங்கமாகி விட்டது. அந்தவகையில் வரும் தீபாவளி தினத்தன்று, ‘பண்டிகைகளை சிறப்பிப்பது பணமா..? உறவா..?’ என்கிற தலைப்பில் வேந்தர் தொலைக்காட்சியில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக இருக்கிறது.

6

 சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் விதமாக இந்த பட்டிமன்றத்தை தலைமை தாங்கி நடத்துகிறார் இயக்குனனரும் நடிகருமான கே.பாக்யராஜ். இருதரப்பினரினரின் வாதங்களும் அவரவர் தரப்பில் கூறுவதுதான் உண்மையோ எனும் விதமாக அமைந்து, நடுவர் பாக்யராஜை அவ்வப்போது தடுமாற செய்தாலும், இறுதியில் சாமர்த்தியமாக திறனாய்வு சரியான முடிவை பாக்யராஜ் கூறுவதும் பட்டிமன்றத்தை மேலும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு செல்கின்றன.

முன்னணி பேச்சாளர்கள் பங்குகொள்ளும் இந்த பட்டிமன்றம் நவம்பர் -6ஆம் தேதி தீபாவளி தினத்தன்று காலை 10:00மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Faceinews.com