திருமதி இந்தியா 2018 பட்டம் வென்ற நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார் ஒர் பார்வை

IMG-20181012-WA0296

Faceinews Logo - Copy

பிரியதர்ஷினி ராஜ்குமார் ஒரு தமிழ் சினிமா நடிகை, பயிற்சி பெற்ற நடன கலைஞர் மற்றும் சமூக ஆர்வலர். சென்னையில் பிறந்த இவர் சென்னை கலை மற்றும் கைவினை கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். மேலும் இவர் விளம்பர படங்களில் உதவியாளராகவும், விளம்பரங்களுக்காக மாதிரியாகவும் (model) இருந்து வருகிறார்.

IMG-20181012-WA0302

இவரது கல்லூரி நாட்களில் திரைப்பட நாடக குழுக்களில் ஆங்கில நாடகங்களான ‘அலையன்ஸ் ஃபிரான்சிஸ்’ மற்றும் ‘மேக்ஸ் முல்லர் பவன்’ ஆகிய நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். அதன் மூலம் ஒரு நாடக கலைஞராக நன்கு அறியப்பட்டார். அந்த சமயத்தில் இவருக்கு இயக்குனர் இமயம்
திரு. கே. பாலச்சந்தரின் மேடை நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

IMG-20181012-WA0297

திருமதி.பிரியதர்ஷினி, பத்ம பூஷண், டாக்டர். பத்மா சுப்ரமணியம் அவர்களிடம் பயிற்சி பெற்று பரதநாட்டிய நடன கலைஞராக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பரவலாக பணியாற்றி பல பாராட்டுகளை பெற்றுள்ளார்.

IMG-20181012-WA0295

திருமதி.பிரியதர்ஷினி, 2015 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக இருந்து வருகிறார். கவண், ரெமோ மற்றும் அச்சம் என்பது மடமையடா போன்ற மிகப்பெரிய படங்களில் நடித்துள்ளார்.

IMG-20181012-WA0300

மேலும் 2018/2019 – ம் ஆண்டில் விரைவில் திரையிட காத்திருக்கும் பிற திரைப்படங்களில் பணிபுரிந்து வருகிறார்.

IMG-20181012-WA0298

திருமதி.பிரியதர்ஷினி அவர்கள் தற்பொழுது சரஸ்வதி கல்வி மற்றும் கலாச்சார தொண்டு நிறுவனத்தில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.

IMG-20181012-WA0293

இந்நிறுவனம் தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்களை முன்னேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்நிறுவனம் ஆண்டுதோறும் மே மாதம் மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற கபாலீஸ்வரர் ஆலயத்தில் வசந்த் உற்சவ விழாவில் கலாச்சார
நிகழ்வாக நடன மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறது.

IMG-20181012-WA0294

2018 – ம் ஆண்டு அக்டோபர் 1 – ம் தேதி
திருமதி.பிரியதர்ஷினி அவர்கள் புதுடெல்லியில் அழகிகளுக்கான
Dazzle Mrs India World Classic 2018
என்ற பட்டத்தை வென்றார்.

IMG-20181012-WA0299

இந்த பட்டத்தை வென்றதன் மூலம் அவரது சமூக பணி மற்றும் சமூக சேவையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முற்பட்டு வருகிறார்.

IMG-20181012-WA0301

Faceinews.com