மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளை இசை, கலை, இலக்கிய விழாவாகக் கொண்டாடி வரும் “வானவில் பண்பாட்டு மையம் “

IMG-20181205-WA0002

24 ஆண்டுகளாக மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளை இசை, கலை, இலக்கிய விழாவாகக் கொண்டாடி வரும் “வானவில் பண்பாட்டு மையம் ” , இந்த ஆண்டு, டிசம்பர் 8 முதல் நான்கு நாட்கள்,  தமிழ்நாடு அரசின் கலை, பண்பாடு மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையுடன் இணைந்து,
“பாரதி திருவிழா – தேச பக்திப் பெருவிழா ” மிகச் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறது.

டிச.8 காலை தொடக்க விழாவில் மேதகு தமிழ்நாடு ஆளுநர், மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், முன்னணித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

டிசம்பர் 8, 9 ஆகிய இரண்டு முழுநாள் நிகழ்ச்சிகள் சென்னை, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் வெளி மைதானத்தில், “வீர சுதந்திரம்” என்ற பெயரில், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை, அதிலும், குறிப்பாகத்  தமிழ்நாட்டு வீரத்தியாகிகளின் பங்களிப்பைக் காணொலி, ஒலி – ஒளி காட்சிகளுடன், நவீன தொழில்நுட்பக் கலைக்காட்சியாக நிர்மாணிக்கிறார்கள். இளைய தலைமுறையினர் இந்த வரலாற்றுக் கலைக்காட்சியைக் கண்டு, நாட்டுப் பற்றும் வீர உணர்வும் பெறத்தக்க வகையில் இது அமைக்கப் படுகிறது.

டிச.8 காலை, தொடக்க விழாவில், சங்கராபரணம், சலங்கையொலி முதலான 50 க்கு மேற்பட்ட கலைச்சுவை மிக்க திரைப்படங்களை வழங்கிய இயக்குநர் திரு. கே.விஸ்வநாத் அவர்களுக்கு மேதகு ஆளுநர் “பாரதி விருது” வழங்க, திரையுலகின் முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் பாராட்டுகிறார்கள்.

டிச. 8, 9 இரு நாட்களிலும் காலை முதல் இரவு வரை கலைவாணர் அரங்கத்தின் உள்ளரங்குகளில்  முன்னணிக் கலைஞர்கள், திரையுலக நட்சத்திரங்கள், மாணவ, மாணவியர் 1500 பேர் பங்கு பெறும் பல்சுவைக் கலை நிகழ்ச்சிகளும், சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் பட்டிமன்றமும், பாரதியின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் “பாரதி – யார்?” நாடகமும், பல்லாயிரம் குழந்தைகள் பங்கேற்கும் ஓவிய, மாறுவேடப் போட்டிகளும் நடைபெறும்.

டிசம்பர் 10, 11 ஆகிய இரண்டு நாட்களும் நிகழ்ச்சிகள் சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் நடைபெறும்.

டிசம்பர் 10, மாலையில் நாட்டிய நிகழ்ச்சியைத் தொடர்ந்து, முனைவர் வ.வே.சு. இயக்கத்தில், திரு.இல.கணேசன், இசைக்கவி ரமணன், பர்வீன் சுல்தானா பங்கேற்கும் கருத்தரங்கம் நடைபெறும்.

மஹாகவியின் பிறந்த நாளான டிசம்பர் 11 அன்று, காலை 7.30 மணிக்குக் கடற்கரை பாரதியார் சிலையருகில் இருந்து, பாரதியார் இல்லத்திற்கு 5000 மாணவ, மாணவியர், இளைஞர்கள், பாரதி அன்பர்கள் நடைபயணம் செல்லும் “Walkathon ” நிகழ்ச்சியும், வழக்கம் போல் பாரதியின் “ஜதி பல்லக்கு” ஊர்வலமும் நடைபெறும். தொடர்ந்து, கவிதைப் போட்டி, கவிப்பொழிவுக்குப் பிறகு, நிறைவாக சுகி.சிவம் அவர்களின் பேருரையும் நிகழும்.

Exhibition Details…

SOUND & LIGHT…

1.அழகு முத்துக்கோன்

2. ஜாலியன் வாலா பாக் படுகொலை

3. பகத் சிங், ராஜகுரு, சுக்தேவ்

4. மருது சகோதரர்கள்
AUDIO VISUAL

5. கட்டபொம்மன்

6. சாவர்க்கர்

7. வ.உ.சி

8. பாரதி

9. காந்தி
INFO GRAPHICS

10. கப்பற் படைப் புரட்சி

11. வேலு நாச்சியார்
SLIDE SHOW

12. திலகர்

13. அரவிந்தர்

14. நேரு

15. நேதாஜி

16. படேல்

17. அபுல் கலாம் ஆசாத்

18. சுப்ரமணிய சிவா

19. திரு வி.க.

20. ராஜாஜி

21. தேவர்

22. K B சுந்தராம்பாள்

23. காமராஜர்

24. ம பொ சி

25. கேப்டன் லக்ஷ்மி

26. டாக்டர் அன்னி பெசன்ட்
DISPLAYS

27. பகதூர் ஷா

28. கோகலே

29. சித்தரஞ்சன் தாஸ்

30. ஜெயபிரகாஷ் நாராயணன்

31. வாஞ்சிநாதன்

32. பூலித் தேவன்

33. தீரன் சின்னமலை

34. ஜி.சுப்ரமண்ய ஐயர்

35. சேலம் விஜய ராகவாச்சாரியர்

36. வ வே சு ஐயர்

37. நீலகண்ட பிரம்மச்சாரி

38. மதுரை வைநத்திய நாத ஐயர்

39. சீர்காழி சுப்பராயன்

40. செண்பகராமன்

41. சத்தியமூர்த்தி

42. சிங்காரவேலர்

43. பத்மாசினி அம்மாள்

44. அஞ்சலை அம்மாள்

45. ஜீவா

46. மதுரகவி பாஸ்கர் தாஸ்

47. S S விஸ்வநாத தாஸ்

48. ஜே சி குமரப்பா

49. ஆர்யா

50. திருப்பூர் குமரன்

51. கக்கன்

52. லாலா லஜபத் ராய்
FRONTAGE DISPLAY

53. வெள்ளையனே வெளியேறு படங்கள்

Faceinews.com