“துப்பாக்கி முனை” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

துப்பாக்கி முனை ஆக் ஷன் பட விரும்பிகளுக்கு சிறந்த விருந்து. மிக குறைந்த பொருட்செலவில் குறைந்த கதாபாத்திரங்களை கொண்டு பெரிய படம் போல் எடுத்த இயக்குனர் தினேஷ் செல்வராஜ்க்கு பாராட்டுகள். 
Faceinews Logo - Copy
விக்ரம் பிரபு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் முமம்பையில் மொத்தம் 33 என்கவுன்டர்களை தயவு தாட்சன்யமின்றி செய்து முடித்து விட்டு 34 வது என்கவுன்டருக்கு ராமேஸ்வரம் வருகிறார். விக்ரம் பிரபுவின் இரக்கமற்ற கொலைகளால், மகப்பேறு மருத்துவரான அவரது தாயாரே இவரை விட்டு விலகி வாழ்கிறார். காதலி ஹன்சிகா மோத்வானியும் பிரிகிறார். 
இராமேஸ்வரத்தை வசிக்கும் 14 வயது சிறுமி மஞ்சள் நாயகியை வட மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் வி.ஜெ.ஷா கற்பழித்து, கொலை செய்து கடலில் வீசியதற்காக என்கவுன்டர் செய்ய மும்பையிலிருந்து வரும் விக்ரம் பிரபு. மகளை பரிகொடுத்து அவளது மரணத்திற்கு காரணமாவனுக்கு தானே பாடம் கற்பிக்க வேண்டும் என வெறியுடன் இருக்கும் தந்தை எம்.எஸ்.பாஸ்கர். சதி செயல் பின்னனியில் ஒரு கொள்ளை கும்பல் என படம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாம் அடுத்த காட்சி என்ன என்று யூகிக்க முடியாத திரை கதைக்காக மீண்டும் இயக்குனருக்கு பாராட்டு வைக்கலாம். நல்ல கருத்தை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வைத்தது ரசிகர்களுக்கு நிறைவை தந்துள்ளது.
படத்தின் ஒளிபதிவாளருக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும். பாடல்கள் எடுபடவில்லை, பின்னனி இசை காட்சியை மீறி கூடுதல் சப்தம் மற்றும் இறைச்சல் தலைவலிக்கு வழிவகுக்கிறது. நாலு கதாபாத்திரங்கள் முழு கதைக்கும். கதாநாயகி ஹன்சிகா வரும் காட்சிகள் விரல் விட்டு எண்ணி விடலாம். கதாநாயகன் விக்ரம் என சொன்னாலும், படத்தின் உண்மையான நாயகர்கள் எம்.எஸ்.பாஸ்கரும், வி.ஜெ.ஷாவும் தான். படத்தின் நாயகி என பார்த்தால் மஞ்சள் நாயகியாக வரும் சிறுமி தான். கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தில் நன்றாக செயல் பட்ட இயக்குனர் வசனத்தில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம் தெளிவு வேண்டும் என்பதற்காக ஜவ்வு போல் இழுத்து 20 ஆண்டு முன்பு வந்த படங்களின் வசனம் போல் ஆக்கி விட்டார்.
 
நடிகர்கள்:
விக்ரம் பிரபு
ஹன்சிகா மோத்வானி
எம். எஸ். பாஸ்கர்
வி.ஜெ. ஷா
வேல ராமமூர்த்தி
ஆடுகளம் நரேன்
தொழில்நுட்ப கலைஞர்கள்:
இயக்குனர் – தினேஷ் செல்வராஜ்
இசை – எல். வி. முத்துகணேஷ்
ஒளிப்பதிவு – ராசாமாதி
கலை – மாயபாண்டி
படத்தொகுப்பு – புவன் ஸ்ரீனிவாஸ்
பாடல்கள் – புலவர் புதுமைப்பித்தன் | பா. விஜய்
சண்டை பயிற்சி – அன்பறிவ்
தயாரிப்பாளர் – கலைப்புலி எஸ் தாணு
தயாரிப்பு நிறுவனம் – வி கிரியேஷன்ஸ்
விக்ரம் பிரபு மற்றும் தாணுவுக்கும் இப்படம் சின்ன சறுக்கல் தான். தோல்வி பட கணக்கில் கூடுதல் ஒன்று. இப்படம் விக்ரம் பிரபு ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் ஆனால் மற்ற படி திரைப்பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்காது.
நேரமும் – பணமும் அதிகமாக இருந்தால் இப்படத்திற்காக செலவழிக்கலாம்.

 

Faceinews.com