சென்னையைச் சேர்ந்த 18 வயது இளைஞருக்கு நாட்டின் மிக இளம்வயதில் சப்கியுட்டேனியஸ்இம்பிளான்டபிள்கார்டியோவெர்ட்டர்டிஃபிப்ரிலேட்டர் ( S -ICD) எனும்நவீன கருவிபொருத்தப்பட்டுள்ளது.

Dr.A.B Gopalamurgan, Chief Cardiologist, Kauvery Hospitals

Faceinews Logo - Copy

திடீர் இதய முடக்கம் காரணமாகஏற்படும் மரணத்தைத்தவிர்ப்பதற்கு சென்னை காவேரிமருத்துவமனை பிரத்தியேகமாகவிளங்குகிறது.

சென்னை,  ஜனவரி, 2019 : காவேரிமருத்துவமனையின் மூத்த இதய நோய்சிகிச்சை நிபுணரும் எலக்ட்ரோ பிசியாலஜிநிபுணருமான டாக்டர்A.B.கோபாலமுருகன் தலைமையிலானதிடீர் இதய முடக்க மரணம் தவிர்ப்புத்திட்டத்தின் (SCDPP) இதய நோய் சிகிச்சைவல்லுநர் குழு சென்னையைச் சேர்ந்த 18வயது இளைஞருக்குத் தோலுக்கு அடியில்பொருத்த கூடிய டிஃபிப்ரிலேட்டரைப்பொருத்தி சாதனை படைத்துள்ளது.இந்தியாவிலேயே மிக இளம் வயதில்இந்தத் தோலுக்கு அடியில் பொருத்தக்கூடிய டிஃபிப்ரிலேட்டர் கருவிஇவருக்குத்தான் முதன் முறையாகப்பொருத்தப்பட்டுள்ளது. திடீர் இதயமுடக்கம் காரணமாக அந்த இளைஞருக்குஎந்த நேரத்திலும் உயிரிழப்புஏற்படுவதற்கான அபாயம் இருப்பதைக்காவேரி மருத்துவமனையின் SCDPPமையம் கண்டறிந்தது. அதனைத்தொடர்ந்து அந்த இளைஞருக்கு இந்தஅறுவைசிகிச்சை வெற்றிகரமாகமேற்கொள்ளப்பட்டு, திடீர் இதய முடக்கம்காரணமாக மரணம் ஏற்படுவதுதடுக்கப்பட்டுள்ளது.

திடீர் என நினைவு இழந்து கீழேவிழுந்ததால் தலையில் அடிபட்டு காயம்ஏற்பட்டு சென்னையைச் சேர்ந்த 18வயதான இளைஞர் ஒருவர் பல முன்னணிமருத்துவமனைகளில் பல்வேறுபரிசோதனைகள் மற்றம் சிகிச்சைகள்மேற்கொண்டும் பலன் இல்லாதநிலையில் அவர் காவேரிமருத்துவமனைக்கு வந்தார்.மருத்துவமனையின் நோய் கண்டறிதல்வழிகாட்டுதல்கள் படி அவருக்கு SCDPPமையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அப்போது அவருக்கு இதயத் துடிப்புதொடர்பான உயிருக்கு ஆபத்தைவிளைவிக்கக் கூடிய இதயம் சார்ந்த மின்ஓட்டத்தில் பாதிப்பு இருப்பதுதெரியவந்தது.

இதன் காரணமாக இதயத் துடிப்புச்சீரற்றதாக இருந்ததால் அவருக்கு நினைவுஇழப்புப் பிரச்னை ஏற்பட்டது. இதற்குஉடனடியாகச் சிகிச்சை அளித்தாகவேண்டிய சூழ்நிலை. இல்லை என்றால்,இதயத் துடிப்புக்கு காரணமானமின்னோட்ட செயல்பாட்டில் பிரச்னைஏற்பட்டு திடீர் இதய முடக்கம் அதாவதுஇதயம் துடிப்பது நின்று மரணம்நிகழலாம். இதைத் தவிர்க்க ஒரே வழிஇதயத் துடிப்பை கண்காணித்துஎப்பொழுதெல்லாம் எல்லாம் சீரற்றஇதயத் துடிப்பு ஏற்படுகிறதோ அப்பொழுதுஉடனடியாக அதைச் சரி செய்யும் ஐ.சி.டிஎனப்படும் செயற்கை மின்னோட்டத்தைச்செலுத்தி இதயத் துடிப்பை சரி செய்யும்கருவியைப் பொருத்த வேண்டும்.

இதய மின்னோட்டத்தில் ஏற்படும் பிரச்னைகாரணமாக ஏற்படும் சீரற்ற இதயத் துடிப்புமற்றும் அதைச் சரி செய்யும் முறை, 18வயது இளைஞனுக்கு இந்தச் சிகிச்சைஅளித்தது பற்றிக் காவேரிமருத்துவமனையின் மருத்துவர்A.B.கோபாலமுருகன் அவர்கள்கூறுகையில், “பொதுவாகச் செயற்கைமுறையில் இதய மின்னோட்டத்தைச் சரிசெய்யும் டிஃபிப்ரிலேட்டர் என்பதுஉடலுக்குள் அதாவதுரத்த நாளமண்டலத்துக்குள் வைக்கப்படும்ஆனால்,அதில் சில பிரச்னைகள் உள்ளனரத்தநாள மண்டலத்துக்குள் கருவிவைக்கும்போது அது வாழ்நாள் முழுக்கரத்தக் குழாய் மற்றும் இதயத்துக்குள்ளாகஇருக்க வேண்டும்இதனால் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புஅதிகம்மறு அறுவை சிகிச்சை செய்யவேண்டியதுகருவியை மாற்றும்போதுஏற்படக் கூடிய சிக்கல்கதிர் வீச்ச என்றுவேறு சில பிரச்னைகளும் உள்ளன

18 வயதே ஆன இந்த இளைஞனுக்குஇதயத்துக்குச் செல்லும் பெரிய ரத்தநாளம் வழியாக ஒயரை செலுத்திஇதயத்தை அடையும் வழக்கமான ஐ.சி.டிகருவியைப் பயன்படுத்துவதற்குப்பதிலாக, எஸ்.சி.டி எனப்படும் நவீனகருவியைப் பொருத்த திட்டமிட்டோம்.அதாவது நெஞ்சுக் கூட்டுக்குள் கருவியைவைப்பதற்குப் பதில், நெஞ்சுக் கூட்டுக்குமேல்… அதேநேரத்தில் தோலுக்கு அடியில்கருவியை வைக்கும் அதிநவீன சிகிச்சைமுறைதான் எஸ்-ஐ.சி.டி (Subcutaneous Implantable Cardioverter Defibrillator (S-ICD)).இதன் மூலம் அந்த இளைஞருக்கு நோய்த்தொற்றுக்கான வாய்ப்புக் குறைகிறது.நெஞ்சுக் கூட்டைத் திறந்து மிகப்பெரியஅறுவைசிகிச்சை செய்ய வேண்டியதேவை இல்லை. அதே நேரத்தில், இதயத்துடிப் கண்காணிக்கும், பிரச்னை ஏற்படும்நேரத்தில் இதய மின்னோட்டத்தைச் சீர்செய்யும் டிஃபிப்ரிலேட்டர் செயல்பாடுவழக்கம்போல் கிடைத்து அவரது உயிர்காப்பாற்றப்படும்” என்றார்.

எந்த நேரத்திலும் உயிர் போகலாம் என்றசூழலில் இருந்த 18 வயது இளைஞருக்குஉலகின் மற்ற பகுதிகளில் கிடைக்கும்மிகச் சிறந்த சிகிச்சை முறையானதுசென்னையிலேயே கிடைத்துள்ளது. இதன்காரணமாக இளைஞரின் உயிர்காப்பாற்றப்பட்டதுடன், வழக்கமானவாழ்க்கை முறைக்கும் அவர்திரும்பிவிட்டார். இதனால் இளைஞரின்குடும்பத்தினர் பெருமகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.

Faceinews.com