இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னை இலக்கியத் திருவிழா நிறைவு நிகழ்ச்சியில்  பரிசுகளை வழங்கினார், நடிகர் திரு. பொன்வண்ணன்!

CLF 2019 Valedictory Event Photo

Actor Ponvannan gives away prizes to the winners of literary events during the valedictory event of CLF organized by Chennai Literary Association on 10th Jan. 2019 at JBAS College
(L-R)
Mrs. Latha Rajan, Past President, Chennai Literary Festival
Thiru Ponvannan – Actor
Students
Thiru. Aazhi Senthil Nathan – Writer
Prof. Dr. Armstrong, HOD – Department of English, University of Madras
Mr. R.J. Kumaravel, President, Chennai Literary Festival
Mr. Sudhakar, Secretary, Chennai Literary Festival
Mr. G. Olivannan, Founder, Chennai Literary Festival

Faceinews Logo - Copy

 

  • எழுத்தாளர் திரு. ஆழி’ செந்தில்நாதன் விருந்தினராகப் பங்கேற்றார்

 

சென்னை,  ஜனவரி 2019

 

சென்னை இலக்கியத் திருவிழாவானது 3 நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று, இன்று (ஜனவரி 10, 2019) நிறைவுப் பெற்றது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லூரிகளிலிருந்து இலக்கியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சென்னை ஜே.பி.ஏ.எஸ். மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிறைவு விழாவில் நடிகர் திரு. பொன்வண்ணன் மற்றும்எழுத்தாளர் திரு. ‘ஆழி’ செந்தில்நாதன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பல்வேறு இலக்கியவாதிகளின் உரைகளும், கலை பண்பாட்டு நிகழ்ச்சிகளும் இந்த நிறைவு விழாவுக்கு சிறப்புச் சேர்ப்பனவாக அமைந்தன. சென்னை இலக்கிய திருவிழா அமைப்பின் தலைவர் திரு.குமாரவேல், செயலாளர் திரு.சுதாகர், முன்னாள் தலைவர் திருமதி. லதா ராஜன், நிறுவனர் திரு.ஒளிவண்ணன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சென்னை இலக்கிய கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விலக்கியத் திருவிழா கடந்த ஜனவரி 8, 2019 அன்று தொடங்கியது. தொடக்க நாளன்று டாக்டர் எம்.ஜி.ஆர் எஜூகேஷனல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்டியூட் (Dr. MGR Educational and Research Institute) மாணவர்கள்சிறப்பு தெரு கூத்து நாடகம் ஒன்றினை நடித்து சிறப்பித்தனர். தொடக்க விழாவில் சுமார் 500 கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

 

ஜனவரி 9, 2019 அன்று நடைபெற்ற இரண்டாம் நாள்  விழாவில் 3000 கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற 32 பட்டறை பயிற்சிகளும்,கருத்தரங்குகளும் நடைபெற்றன. இப்பயிற்சி பட்டறைகள் மாநகரின் 27 கல்லூரிகளில் நடைபெற்றன. ஆஸ்திரேலிய ஆய்வுகள்(Australian Studies), தலித் ஆய்வுகள் (Dalit Studies), டிஜிட்டல் மனிதவர்கம் (Digital Humanities), கனடிய நாட்டு ஆய்வுகள் (Canadian Studies) மற்றும் இலக்கியக் கோட்பாடு (Literary Theory) என்ற 5 தலைப்புகளில் சென்னைப் பல்கலைக்கழகத்திலும், தலைமைத்துவம் (Leadership) என்ற தலைப்பில் ஜே.பி.ஏ.எஸ் மகளிர் கல்லூரியிலும், டிஜிட்டல் இலக்கியம் (Digital Literature) என்ற தலைப்பில் லயோலா கல்லூரியிலும், மொழியாக்கம் (Translation) என்ற தலைப்பில் சென்னை மாநிலக் கல்லூரியிலும், மகிழ்ச்சியின் மொழி (Language of Happiness) என்ற தலைப்பில் பச்சையப்பன் கல்லூரியிலும் பயிலரங்குகள் நடைபெற்றன. தமிழ்ப் பேச்சுப் போட்டிகள் அரும்பாக்கத்தில்உள்ள டி.ஜி. வைஷ்ணவக் கல்லூரியில் நடைபெற்றன. 30 போட்டியாளர்களில் மூவர் முதல் மூன்று பரிசுகளை வென்றனர். 10 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

“கடந்த 5 ஆண்டுகளில் வெற்றிகரமாக நடைபெற்ற இவ்விழாவின் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் இளம் மாணவர்கள் மிக அதிக அளவில் இப்போட்டிகளில் பங்கேற்றது பெரும் மகிழ்ச்சியும், எங்கள் பணியை மேலும் தொடர உற்சாகமும் அளிக்கிறது. மென் ஊடகத்தின் தாக்கத்திற்கு உட்பட்ட இன்றைய சூழலில் இத்தகைய மாணவர்களின் பங்கேற்பு பாராட்டத்தக்கது. இம்மூன்று நாட்களில் 4000-கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் மேலும் புத்தகங்களை படித்து அந்த இன்ப அனுபவத்தை பெற்று வாழ்வின் விழுமியங்களை பெறுவோரின் எண்ணிக்கை பெருக வேண்டும் என்பதே சென்னை இலக்கிய திருவிழாவின் நோக்கமாகும்” என்று திரு.குமாரவேல் தெரிவித்தார்.

இவ்விலக்கியத் திருவிழாவின் முன்னோட்டமாக பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகள் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் அண்மையில் (டிசம்பர் 8, 2018) அன்று நடைபெற்றன. இவற்றில் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். படம் பார்த்து கதை எழுதுதல், வினாடி வினா (தமிழிலும், ஆங்கிலத்திலும்), தனி நடிப்பு, கதை எழுதுதல், நாடக நடிப்பு,கதைப் பாட்டு (Sing a Story), பாடல் இயற்றுதல், பேச்சுப் போட்டி, எழுத்தாளரை அடையாளம் காணுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மாணவர்கள் தங்கள் தனித் திறன்களை வெளிப்படுத்தினர்.

“சென்னை மற்றும் புறநகரிலிருந்து 30-கும் மேற்பட்ட கல்லூரிகள் சென்னை இலக்கிய அமைப்புடன் கைகோர்த்து இவ்வாண்டும் இலக்கிய திருவிழாவை மாபெறும் வெற்றியடைய செய்தது மகிழ்ச்சியூட்டுகிறது. இதில், சென்னை பல்கலைக்கழகத்தின்ஆங்கிலத்துறையின் தலைவர் முனைவர் ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் அண்ணா ஆதர்ஷ் கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் திருமதி. மீனா குமாரி ஆகியவர்களின் பங்கும் குறிப்பிடத்தக்கது,” என்றனர் திரு. சுதாகர், திருமதி. லதா ராஜன் மற்றும் திரு. ஒளிவண்ணன்ஆகியோர்.

Faceinews.com