டாக்டர். பால் தினகரன் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழாவில் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

1547316453805_0_IMG-20190112-WA0491

Faceinews Logo - Copy

சென்னை : மறைந்த புகழ் பெற்ற கிறிஸ்துவ நற்செய்தியாளர் சகோ. டி.ஜி.எஸ் தினகரன் அவர்களின் பேரனும் இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைவரும், கோயம்புத்தூர் காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் மற்றும் சீஷா தொண்டு நிறுவனத்தின் தலைவருமான டாக்டர்.பால் தினகரன் – திருமதி. இவாஞ்சலின் பால் தினகரன் அவர்களின் புதல்வர் சாமுவேல் தினகரன், நெல்லையை சேர்ந்த பிரபல மருத்துவர்கள் ராஜ்குமார் ஞானமுத்து – சகுந்தலா அவர்களின் மகள் டாக்டர். ஷில்பா ஆகியோர்களின் திருமண வரவேற்பு விழா சென்னை வானகரத்தில் உள்ள JC கார்டனில் மிக சிறப்பாக நடைப்பெற்றது. மணமக்கள் இருவரும் ஏழை குழந்தைகளுடன் கேக் வெட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏழை குழந்தைகள் 1000 பேருக்கு புத்தாடைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள், மேலும்அவர்களின் வாழ்வாதாரத்திற்காக இஸ்திரி பெட்டி வழங்கினர். திருமணத் தம்பதியர் சுற்றுச்சூழல் நலன் கருதி 1000 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

0_IMG-20190112-WA0279

0_IMG-20190112-WA0279

இவ்விழாவில் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தினத்தந்தி அதிபர் பாலசுப்ரமணிய ஆதித்தனார், நல்லி குப்புசாமி செட்டியார்,ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.மேலும் தொழில் அதிபர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள்,முக்கிய பிரமுகர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சீசா தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் திறளாக கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர்.

Faceinews.com