நாடாளுமன்ற தேர்தல் அ தி மு கவுக்கு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் ஆதரவு : காயல் அப்பாஸ் அறிக்கை !

IMG_20181211_184448
Faceinews Logo - Copy
நாடாளுமன்ற தேர்தல் அ தி மு கவுக்கு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் ஆதரவு : காயல் அப்பாஸ் அறிக்கை !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .
தமிழகத்தில் முந்தய நாடாளுமன்ற தேர்தலில் அ தி மு க போட்டியிட்டு 38 தொகுதியில் அமோக வெற்றி பெற்று இந்தியாவில் சாதணை படைத்த புரட்சி தலைவி அம்மா அவர்களின் வழியில் நல்லாட்சி செய்யும் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மற்றும் துணை முதலமைச்சர் அவர்களும் தொலை நோக்கு பார்வைவுடன் மிக சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
2019 – 2020 ஆண்டிற்க்கான தமிழக நடுநிலை அறிக்கையை துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் சட்டமன்றத்தில் 08- 02- 2019  தாக்கல் செய்து உள்ளார் . இதில் கஜா புயலால் பாதிக்கபட்ட மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு ஓரு லட்சம் வீடுகள் கட்டி தரப்படும். ஐந்து ஆண்டுக்கும் மேல் அரசு புறம் போக்கு நிலங்களில் வசிக்கும் குடும்பத்திற்க்கு இலவச பட்டா வழங்க படும் என்ற பல்வேறு திட்டங்களை தொலை நோக்கு பார்வையுடன் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்ததை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்கிறது.
சிறுபாண்மையினருக்கு பாதுகாப்பு அரணாகவும் இஸ்லாமியர்களுக்கு ஹஜ் பயணத்திற்கு மாணியம் வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்களுக்கும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
எனவே : வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ தி மு கவுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் முழு ஆதரவை தெரிவித்து கொள்கிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிளும் அ தி மு க வேட்பாளர்களை ஆதரித்து திவிர பிரச்சாரம் செய்து அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் முழுமையாக பாடுபடும் எனவும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மற்றும் சார்ந்து இருக்கின்ற அமைப்பின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை சந்திக்க நேரம் ஓதுக்கி தரும்மாறு பணி அன்புடன் கேட்டு கொள்கிறோம் . என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
Faceinews.com