தமிழ் நாட்டில் முதன்முறையாக வாட்ஸ்அப் குழு மூலம் இணைந்த பத்திரிகையாளர்கள் தங்களது உரிமையை மீட்க ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்

IMG-20190212-WA0173

Faceinews Logo - Copy

தமிழ் நாட்டில் முதன்முறையாக வாட்ஸ்அப் குழு மூலம், அனைத்து பத்திரிக்கையாளர்களும் இணைந்து, பத்திரிகையாளர்கள் உரிமையை மீட்க ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.

திருச்சியில் ஊடக உரிமைக்குரல் சார்பில் அனைத்து பத்திரிகை ஊடகவியலாளர்கள் இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டம் 10.02.19 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தினசரி, வார, மாத இதழ், ஆன்லைன் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் நிருபர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ஆலோசனை வழங்கினர்.

இதில், தமிழகம் முழுவதற்குமான பத்திரிக்கையாளர்களின் செயல்பாடுகள் குறித்தும், அவர்களின் பாதுகாப்பு பற்றியும் பல கருத்துக்களை முன் வைத்தனர்.

அதை மய்யப்படுத்தி தற்போது ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவர்களின் எதிர்கால நலன் குறித்தும் உரை நிகழ்த்தப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டமானது, ஊடக பேதங்களை கடந்து அனைத்து ஊடக உறவுகளின் தன்னெழுச்சியால் நடைபெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பல மூத்த பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதில் மாவட்டம் வாரியாக உள்ள பத்திரிகையாளர்களை சந்தித்து, ஊடகத்தின் உரிமை என்ன என்பதை எடுத்து கூறும், ஊடக பயிற்சி பட்டறை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த இனிய நிகழ்வை ஊடக தோழர்களான ராபர்ட் ராஜ், தமிழன்வடிவேல், உதய்சிங்,மற்றும் திருச்சி ஜாகீர் உசேன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

Faceinews.com