வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் “ஆவணங்கள்” வழக்கறிஞர்கள் தரும் விளக்கங்கள் என்ற நூல் வெளியீட்டு விழா

20190224_185609

Faceinews Logo - Copy

வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் “ஆவணங்கள்” வழக்கறிஞர்கள் தரும் விளக்கங்கள் என்ற நூல் வெளியீட்டு விழா

சென்னையில் 24/02/2019, ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி முதல் மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கியது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் மு.மேத்தா, மேனாள் தமிழ்ப்பேராசிரியர், மாாநிலக் கல்லூரி, சென்னை கலந்துக் கொண்டு நூலை வெளியிட முதல் பிரதியை பிரபல நடிகை குட்டி பத்மினி பெற்றுக் கொண்டார்.

IMG-20190225-WA0623

நூலாசிரியர் – வழக்கறிஞர், ஆர். கிருஷ்ணமூர்த்தி – திருமதி. கோவர்தனம் தம்பதியினரின் மகள் இலட்சிதாவின் முதலாமாண்டு பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

வேல்ஸ் பல்கலைக்கழக மொழிகள் புல முதல்வர், மனித நேய செம்மல் திரு.ப. முத்துலிங்கம், வின்டிவி.நெறியாளர் , வழக்கறிஞர் ஜனார்த்தனம்,
பேராசிரியர் முனைவர் கருப்பன், மேனாள் முதல்வர் உ.நா. அரசினர் கல்லூரி, பொன்னேரி.

இசை ஆராய்ச்சியாளர், ஊடகியலாளர் டெஸ்லா கணேஷ், பேராசிரியர் ச. டேவிட் அந்தோணிநாதன், தமிழ்த்துறைத்தலைவர், உ.நா. அரசினர் கல்லூரி, பொன்னேரி, உள்துறை கூடுதல் செயலாளர், தமிழ்நாடு அரசு, பி.ஜி.தியாகராஜன் மற்றும் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

IMG-20190225-WA0630

ஏற்புரையும், நன்றியுரையும் நூலாசிரியர் – வழக்கறிஞர்,கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கினார்.

பச்சையப்பன் கல்லூரி தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் திரு.பா. முத்துசாமி நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்

நாட்டுப்பண்னுடன் இரு பெரு விழா இனிதே நிறைவடைந்தது.

இந்நூலை “படைப்பகம்” நூல் வெளியீட்டு நிறுவனம், பிரசுரிக்கின்றனர்.

 

Faceinews.com