“நான்காம் விதி” குறும்படம் மூலம் திரை நட்சத்திரங்களை கவர்ந்த இயக்குனர் அணு சத்யா…!

2018-12-06-12-29-40-352
Faceinews Logo - Copy
காதல் என்பது விட்டுக்கொடுத்தல்..சில நேரங்களில் காதலையே விட்டுக்கொடுத்தல் என்ற கருத்தை இயக்குனர் ஆணித்தரமாக கூறிய தைரியம் பாராட்டுக்குரியது.
   தனக்கு கிடைக்காதது அடுத்தவனுக்கும்  கிடைக்கக்கூடாது என்ற மனித எண்ணம் “தோல்வி” என்ற பொருளாக மட்டுமே இருத்தல் வேண்டும் என்று நித்தமும் பிரார்த்திக்கும் சில நல்ல உள்ளங்கள் மத்தியில் தனக்கு கிடைக்காத காதலி அடுத்தவனுக்கும் கிடைக்க கூடாது என என்னும் சில இளைஞர்களின் தீய எண்ணத்தை தீயிட்டு கொளுத்திய புரட்சி இயக்குனருக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
2019-02-08-19-23-40-005
   அவர் ஒரு பெண் இயக்குனர் என்பது நமக்கு ஆச்சரியமும் பெருமையும்.
   குறும்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.முக்கியமாக உளவியல் மருத்துவராக வரும் நடன இயக்குனர் ராம்ஜியின் நடிப்பு நிறைவு.இறுதி காட்சியில் அவர் இல்லாதது மட்டும் சிறுகுறை.
IMG-20181127-WA0082
    காதலியை கொல்வதை ஒரு கொலை முயற்சியாக மட்டுமல்லாமல் அதை உளவியல் ரீதியாக அணுகிய இயக்குனர் அனு சத்யாவிற்கு பாராட்டுக்கள்.
    திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களான  நடிகைகள் அமலா பால்,வரலட்சுமி,இயக்குனர்கள் ராஜு முருகன் ,விக்னேஷ் சிவன் ,அருண் ராஜ காமராஜ் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மற்றும் எடிட்டர் ரூபன் ஆகியோரின் பாராட்டை பெற்றுள்ளார் என்பது தனிச்சிறப்பு…!!!
IMG20190219223054
   நான்காம் விதி குறும்படத்தை காண மேல் காணும் லிங்கை கிளிக் செய்யவும்.
IMG_0294_13533
Faceinews.com