T.U.C.S.Ltd., திருவல்லிக்கேணி துணைத்தலைவராக V.P.S. நியமனம்

20190323_131349

Faceinews Logo - Copy

அதிமுக 114வது கிழக்கு வட்ட கழக பொருளாளர் திரு. C.V.பன்னீர்செல்வம் (எ) V.P.S. அவர்கள் T.U.C.S.Ltd., திருவல்லிக்கேணி, சென்னை – 600005 துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

திரு. V.P.S. அவர்களை இப்பதவிக்கு தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. தி.நகர் சத்தியா அவர்கள் முன்மொழிந்தார். திரு. M.K.சிவா மற்றும் திரு. C.S. ஆனந்தன் ஆகியோர் வழிமொழிந்தனர்.

0_IMG-20190323-WA0247

திரு. C.V. பன்னீர்செல்வம் (எ) V.P.S. அவர்கள் 1977ல் இருந்து புரட்சி தலைவரின் அதிமுக கட்சியில் தொண்டராக பல வீர, தீர செய்து பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் இதயத்தில் இடம் பிடித்தவர். அன்னாரது மறைவுக்கு பின் இரும்பு பெண்மனி, புரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அதிமுக கட்சிக்கு அரும்பாடு பட்டு கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்தமையால் புரட்சித்தலைவியின் நல் மதிப்பை பெற்றவர்.

தனது இளமைகாலம் முதல் இன்று வரை அதிமுக கட்சிகாக மட்டுமே கழக பணியாற்றி, பொது மக்களுக்கு நல உதவிகள் பல செய்துள்ளார்.  தற்போது தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையிலான அதிமுக கட்சியின் வளர்ச்சிகாக கடினமாக உழைத்து கொண்டிருப்பவர்.

இவர் திரையுலகில் சினிமா வினியோகஸ்தராகவும், ஆல் மூவி மீடியேட்டர்ஸ் அசோசியேஷன் தலைவராகவும் இருக்கிறார். சினிமா துறையில் பல வருட அனுபவம் வாய்ந்தவர்.

தமிழக அரசின் கூட்டுறவு நகர நுகர்வோர் நல சமூகமாக விளங்கும் T.U.C.S. Ltd., திருவல்லிக்கேணி, சென்னை – 600005 துணைத்தலைவராக C.V. பன்னீர்செல்வம் (எ) V.P.S. அவர்கள் அனைவரது அபிமானத்தையும் பெற்று ஒருமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Faceinews.com