ASEAN – இந்தியா வர்த்தகம் 2020ஆம் ஆண்டில் உறுதியாக 100 பில்லியன் டாலரைத் தொடும்

Andhra Chamber of commerce

Faceinews Logo - Copy

சென்னை,ஆகஸ்ட், 2019: 2017 ஆம் நிதியாண்டில் 52 பில்லியன் மற்றும் 2018 ஆம் நிதியாண்டில் 63 பில்லியன் அமெரிக்கடாலராகவும் இருக்கும் இந்தியா–ஆப்பிரிக்காவர்த்தகத்தை அதிகரிப்பதற்கான ஒருவிரிவான உத்தியை வகுப்பதில் இந்திய அரசு தற்போது ஈடுபட்டுவருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒருநாடு தவிர ஏறக்குறைய அனைத்து நாடுகளும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன.

இந்தியாவின் பார்வையிலிருந்து பார்க்கையில் சந்தைப்படுத்தல் அணுகலுக்கு இது ஒருமிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.நடப்பு வளர்ச்சி வீதம் தொடருமானால் 2025 ல் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் நடுத்தரவருமான அளவுகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உலகவங்கியின் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில் வர்த்தகம் மற்றும் தொழில்துறைகளை ஆக்கப்பூர்வமாக மாற்றியமைக்கும் அதன் வளர்ச்சியை கண்டறிவதற்கும் மற்றும் பேணி வளர்ப்பதற்குமான முயற்சியில் “ஆஃப்ரோ- ASEAN வர்த்தகம் குறித்ததொழில் சந்திப்பு” என்ற நிகழ்வை நடத்த விருப்பதாக ஆந்திரவர்த்தக சபை அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆப்ரிக்க மற்றும் ASEAN நாடுகளிடையே வர்த்தகம் மற்றும் தொழிலை ஊக்குவிப்பது குறித்து விவாதிப்பதற்கு மற்றும் கலந்துரையாடுவதற்கு ஒரு தளத்தை உருவாக்குவதில் முனைப்பு செலுத்துவதே இந்த சந்திப்பு நிகழ்வின்; நோக்கமாகும்.

நாடுகளிடையே இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வரத்தகவாய்ப்புகளை வழங்குதல் மற்றும் நாடுகளிடையே நியாயமான,சம அளவிலான வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இருதரப்பு வர்த்தகத்தில் நடைமுறை அம்சங்களை பரிச்சயப்படுத்துதல் ஆகியவை இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். இந்த சந்திப்பு நிகழ்வில் புராடக்ட் சார்ந்த பொதுநலக்குழு (ஊஐபு) அமைத்துருவாக்கப்படும் மற்றும் இதில் வர்த்தக சபை உறுப்பினர்கள்,பிற பங்கேற்பாளர்கள் மற்றும் பங்கேற்கின்ற நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் உள்ளடங்குவர்;.

ஆந்திராவர்த்தக சபை தலைவர் டாக்டர். ஏ.டு. இந்திராதத் கூறுகையில்,“வர்த்தகமும் மற்றும் முதலீடும் ஒன்றோடொன்று கைகோர்த்து செல்வதால்,நாம் தொழிலை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் மற்றும் நாடுகளிடையே இரு தரப்புவர்த்தகத் தொழிலை ஊக்கு விப்பதில் அந்த வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த தொழில் சந்திப்பு நிகழ்வின் முனைப்பாக இருக்கிறது. அதேபோன்று ASEAN நாடுகள் மற்றும் இந்தியா இடையே இருதரப்பு வர்த்தகம் 80 பில்லியன் அமெரிக்கடாலரை கடந்துள்ளது. இது வளர்ந்து வரும் நம்பிக்கையை மட்டுமல்லாமல் 2010-லிருந்து ASEAN நாடுகள் மற்றும் இந்தியாவிற்கிடையே வர்த்தகப் பொருட்களில் மிக உயர்ந்த அளவு எட்டப்பட்டிருப்பதையும் காட்டுகிறது.

இந்த வளர்ச்சி தொடருமானால், 2020 ஆம் ஆண்டில் ASEAN நாடுகள் மற்றும்இந்தியாவிற்கு இடையிலானவர்த்தகம் 100 பில்லியன் அமெரிக்கடாலரைதொடக்கூடும்,”என்றார்.

ASEAN அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒன்றானமியான்மர்,நமது கிழக்கத்திய அண்டை நாடுகளுக்கு நுழைவாயிலாககருதப்படுகிறது. இந்திய மருந்தாக்க தொழில் அங்கு குறிப்பிடத்தக்கவகையில் இருக்கிறது. மியான்மர்,செய்து முடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளில் தகவல் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யும் அதேசமயம்,வேளாண் விளைபொருட்கள் மற்றும் பிற மூலப்பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இந்திய ஏற்றுமதிகளுக்கான முக்கியதுறைகளில் எலக்ட்ரானிக் பொருட்கள்,காய்கறிகள்,அரிசி,சர்க்கரை, ஜவுளி,பால்பொருட்கள் ஆகியவை உள்ளடங்கும். மலேசியா,கானாமற்றும் மியான்மர் போன்ற நாடுகளுக்கு இவை ஏற்று மதி செய்யப்படுகின்றன.
ஆட்டோமொபைல்கள் இந்தியாவிலிருந்து கென்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆப்ரிக்கநாடுகளிலிருந்துசெய்யப்படும் ஏற்றுமதிகளில் காபிக்கொட்டை, தேயிலை,உலோககழிவுகள்,மரம்,விலைமதிப்புள்ளகற்கள் (செமிபிரெசியஸ் ஸ்டோன்ஸ்),பருத்திமற்றும் பீன்ஸ் ஆகியவைஉள்ளடங்கும்.
டாக்டர் இந்திராதத் மேலும் கூறுகையில்,“உலகப்பொருளாதாரமானது பலவீனப்படுத்தும் பல நிலவரங்களை எதிர்கொண்டு வருகிற நிலையில்,சமீபத்திய கடந்த காலங்களிலும் மற்றும் இன்றும் கூட இந்தியா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகள் ஆகிய இரண்டும் உயர் பொருளாதார வளர்ச்சியை பராமரித்துவருவதை பார்ப்பது மிகவும் திருப்தியளிக்கிறது. இந்த இரண்டு பிராந்தியங்களும் வளர்ச்சி குறித்த உலகவரைபடத்தில் பிரகாசமான புள்ளிகளாககாணப்படுகின்றன. லாஜிஸ்டிக்ஸ்,வர்த்தகதடைகளை நீக்குவது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதில் அரசாங்கங்களிடையே பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன,’’என்றார்.
ஆந்திராவர்த்தக சபை குறித்து
ஆந்திராவர்த்தக சபை என்பது,சென்னையில், 1928 –லிருந்து இந்தியாவில் வர்த்தகம் மற்றும் தொழிலுக்கு ஊக்கு விப்பு மற்றும் பாதுகாப்பு வழங்குவதில் ஒரு முன்னோடி அமைப்பாகும்.இந்த வர்த்தக சபை செகந்திராபாத்,விசாகப்பட்டினம்,விஜயவாடா மற்றும் நெல்லூரில் (அனைத்தும் ஆந்திரப் பிரதேசமாநிலத்தில் உள்ளன) கிளைகளை திறந்துள்ளது. தற்போது இந்தசபையில் ஏறக்குறைய 1500 உறுப்பினர்கள் உள்ளனர் மற்றும் 35 தொழில் ஃ வர்த்தகசங்கங்கள் இதில் இணைந்துள்ளன. இந்த 87 ஆண்டுகளில் இதன் குறிப்பிடத்தக்கசாதனைசேவையைபெருமிதத்துடன் திரும்பிப்பார்க்கும் அதேசமயம்,தற்போதையமாறிவரும் சூழ்நிலையில் இதற்குநிறைவேற்றவேண்டிய இன்னும் பலபணிகள் உள்ளனஎன்பதைவர்த்தக சபை உணர்கிறது. கடந்தகாலத்தைப் போலவேஆந்திரப்பிரதேசம்,தெலுங்கானாமற்றும் தமிழ்நாடுஆகியவற்றிடையேஎதிர்காலத்திலும் சேவையாற்றுவதற்கும் மற்றும் வர்த்தகமற்றும் தொழில் நலன்களைஊக்குவிப்பதற்கும் மற்றும் நாடடின் நலனைபேணுவதற்கும்,பங்களிப்புசெய்யஆந்திராவர்த்தகசபை தன்னைஅர்ப்பணிப்புஉணர்வுடன் ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

Faceinews.com