தமிழக சீனியர் அணிக்கான இலக்குப்பந்து போட்டி சென்னையில் நடைபெற்றது

IMG_7311-1296x864

Faceinews Logo - Copy

தமிழக சீனியர் அணிக்கான இலக்குப்பந்து போட்டி கே.சி.எஸ்.காசி நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆர்.கே.நகர், சென்னை -600021. 22 செப்டம்பர் 2019 நடைபெற்றது


.

போட்டியினை துவக்கி வைக்க செயலாளர் மற்றும் நிருபர் திரு. பி. சி. ஏ. வைரமணி, உதவி செயலாளர் திரு. ஏ. என். எம். என். ராஜேந்திரன் மற்றும் கல்லூரி முதன்மை முனைவர். ஷோபா எட்வர்ட் ஆகியோர் போட்டியினை துவக்கி வைத்தனர்.

IMG_7435-1296x864

மாவட்டங்களுக்கு இடையிலான இலக்குப்பந்து போட்டியில் வேலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட இலக்குப்பந்து வீரர்கள். இப்போட்டியில் கலந்து கொண்டு மிகவும் சிறப்பாக விளையாடி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார் இதிலிருந்து தமிழக சீனியர் அணிக்கான இலக்குப்பந்து வீரர்கள் சட்டீஸ்கரில் நடைபெறவிருக்கும் சீனியர் நேஷனல் இலக்குப்பந்து போட்டியில் விளையாட உள்ளனர்.

லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை மகளிர் அணி முதல் இடத்தையும், திருவள்ளூர், ஆண்கள் அணி முதல் இடத்தையும், கிருஷ்ணகிரி மகளிர் அணி இரண்டாம் இடத்தையும், செங்கல்பட்டு ஆண்கள் அணி இரண்டாம் இடத்தையும், திருவள்ளூர் மகளிர் அணி மூன்றம் இடத்தையும், மற்றும் சென்னை ஆண்கள் அணி மூன்றம் இடத்தை பெற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இலக்குப்பந்து கழகத்தின் தலைவர் திரு நேரு அவர்களும் காசிநாடார் கல்லூரியின் பொருளாளர் திரு.என்.கணேசன் அவர்களும் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களையும் பரிசுகளையும் சான்றிதழ்களையும் இலக்குப்பந்து கழகத்தின் செயலாளர் திரு ஜமால் ஷரீப் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். வெற்றி பெற்ற அணிகளுக்கும் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட இலக்குப்பந்து வீரர்களை தமிழ்நாடு இலக்குப்பந்து கழகத்தின் சார்பாக வாழ்த்துகிறோம், பாராட்டுகளை தெரிவித்து கொள்கின்றோம்.
ஜமால் ஷெரிப் க. பா
தென் மண்டலத் தலைவர் மற்றும்
பொதுச் செயலாளர் தமிழ்நாடு
இலக்குப்பந்து சங்கம்

Faceinews.com