அப்க்ராட், சென்னை ஐ.ஐ.டி-யுடன் இணைந்து, ‘இயந்திர கற்றல் மற்றும் க்ளவ்ட்’ தொழில்நுட்பம் குறித்த தனித்துவமிக்க உயரிய சான்றிதழை அறிமுகப்படுத்தி இருக்கிறது!

BOM_6432-1440x960

Faceinews Logo - Copy

அப்க்ராட், சென்னை ஐ.ஐ.டி-யுடன் இணைந்து, ‘இயந்திர கற்றல் மற்றும் க்ளவ்ட்’ தொழில்நுட்பம் குறித்த தனித்துவமிக்க உயரிய சான்றிதழை அறிமுகப்படுத்தி இருக்கிறது!

 ஐஐடி மெட்ராஸ் முதன்முறையாக இயந்திர கற்றல் மற்றும் க்ளவ்ட் [Machine Learning and Cloud’] ஆகிய துறைகளில் அடியெடுத்து வைக்கிறது.

 ஐஐடி மெட்ராஸ், இணையதளம் மூலம் கற்பிக்கும் இதர ஐ.ஐ.டி.களின் பட்டியலில் இணைகிறது. இதன் தொடர்ச்சியாக, ஆன்லைன் கோர்ஸ்களை வழங்குகிறது ஐஐடி மெட்ராஸ்.

IMG_8050-1008x756

சென்னை, செப்டம்பர் , 2019: என்.ஆர்.ஐ.எஃப் தரவரிசையில் தொடர்ந்து நான்கு முறை முதலிடம் பெற்ற பொறியியல் நிறுவனமான a [NRIF Rank 1 Engineering Institute] இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மெட்ராஸ் (ஐ.ஐ.டி மெட்ராஸ் [Indian Institute of Technology Madras (IIT Madras)]) உடன் இணைந்து அப்க்ராட் எஜுகேஷன் ப்ரைவேட் லிமிடெட் [upGrad Education Private Limited,] இயந்திர கற்றல் மற்றும் க்ளவ்ட் தொழில்நுட்பத்தில் உயரிய சான்றிதழ் படிப்பாக [‘Advanced Certification Program in Machine Learning & Cloud’], தனித்துவமிக்க பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆடிட்டோரியத்தில் உள்ள மத்திய விரிவுரை அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் இப்பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. உள்ள. ஐ.ஐ.டி மெட்ராஸின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் டாக்டர் ஜானகிராம் டி [Dr. Janakiram D., Professor, Department of Computer Science and Engineering, IIT Madras],, முன்னாள் சதீஷ் தவான் பேராசிரியர், இஸ்ரோ & முன்னாள் இஸ்ரோ எஸ்.டி.எஸ்.சி.யின் முன்னாள் சிறப்பு விஞ்ஞானி மற்றும் இணை இயக்குனர் டாக்டர் சேஷகிரி ராவ் வி [Dr. Seshagiri Rao V, former Satish Dhawan Professor, ISRO & former Distinguished Scientist & Associate Director at SDSC ISRO], மற்றும் ‘அப்க்ராட்’ இணை நிறுவனர்கள் ரோனி ஸ்க்ரூவாலா, மயங்க் குமார், பால்குன் கொம்பள்ளி.
[co-founders of upGrad – Ronnie Screwvala, Mayank Kumar and Phalgun Kompalli.] ஆகியோர் முன்னிலையில் இப்பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதிநவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட கற்கும் தளத்தில், தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுடன் வழங்கும் ’அப்க்ராட்’ ஐஐடி மெட்ராஸுடன் கூட்டு சேர்ந்திருப்பது வெளிப்படையான மிகப் பொருத்தமான தேர்வாக அமைந்திருக்கிறது. ஏனெனில் ஐஐடி மெட்ராஸ், முதல் முறையாக இந்த புதிய பாடப்பிரிவுகளில் களம் இறங்குகிறது. இன்று தொடங்கப்பட்ட புதிய பாடத்திட்டம் 9 மாத சான்றிதழ் பாடத்திட்டமாகும், இதன் கட்டணம் 2 லட்சம் ரூபாய். ஐஐடி மெட்ராஸை சேர்ந்த பேராசிரியர் ஜானகிராம் டி. மற்றும் ஃப்ளிப்கார்ட் [Flipkart], க்ராமேனர் [Flipkart], ஸீ5 [Zee5] ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த அந்தந்த பாடப்பிரிவு தொடர்பான வல்லுநர்கள் [Subject Matter Experts (SMEs)] கற்பிப்பார்கள். இந்த SME-களின் வழிகாட்டுதலின் கீழ் 100+ மணிநேர தொழில்துறை பாடத்திட்டங்கள் [100+ hours of industry projects] இந்த புதிய பாடத்திட்டத்தில் அடங்கும். மேலும் இப்பாடதிட்டத்தில் படிப்பவர்கள் அனைவரும் அப்க்ராட்டின் தொழில்வாய்ப்பு ஆதரவையும் பெறமுடியும்.
அதிவேகமாக மாற்றங்களைக் கண்டுவரும் இன்றைய காலக்கட்டத்தில், ’மெஷின் லேர்னிங்’ எனப்படும் ’இயந்திர கற்றல்’ அதிக முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட இயந்திர கற்றல் சந்தை ஆகிய இரண்டும் வெகு சீக்கிரமே மிகப்பெரிய பெருமளவில் வருவாயைக் குவிக்கும் என நம்பப்படுகிறது. ’ரெக்கமெண்டர் சிஸ்டம்’ [recommender system] மற்றும் ’சாட்பாட்’ , [chatbots] போன்ற தொடர்பான இயந்திர கற்றல் சார்ந்த திறன்களை செயல்படுத்த, உயர் தொழில்நுட்பத்திலான கணினி செயல்திறன் மற்றும் சிறப்பு நோக்கத்திற்கான வன்பொருள் உள்கட்டமைப்பு ஆகியன அவசியம் தேவை. இவற்றை செயல்படுத்த ஆகும் செலவு மிக மிக அதிகம். இயந்திர கற்றல் திறன்களைப் பரிசோதிக்கவும், நடைமுறை உலகில் திட்டங்களை அளவிடவும் தேவையான உள்கட்டமைப்பிற்கான பயன்பாடுகளை க்ளவ்ட் வழங்குவதால், ’க்ளவ்ட் கம்ப்யூட்டிங்’ முக்கிய பங்கு வகிக்கிறது. இயந்திர கற்றல் மற்றும் க்ளவ்ட் ஆகிய இரண்டையும் கற்றுக்கொள்வது, அதை கற்பவர்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். இயந்திர கற்றல் மற்று க்ளவ்ட் ஆகிய இரண்டுக்குமான தேவை இருப்பதால், ’ரெக்கமெண்டர் சிஸ்டம்’ போன்ற இயந்திர கற்றலுக்கான மாடலில் பணிப்புரியும் போது, அதிகரிக்கும் அதன் செலவு அதில் பணிபுரிய ஒரு தடையாகி விடுகிறது.
இங்குதான் க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முக்கிய பங்கு வகிக்கிறது. நிஜ உலகில் இயந்திர கற்றலின் திறனை அறிய உதவும் கட்டமைப்பைப் பெற க்ளவ்ட் உதவுகிறது. அதன் மூலம் அந்த திட்டங்களின் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல உதவுகிறது. இதனால் இயந்திர கற்றல் மற்றும் க்ளவ்ட் ஆகிய இரண்டையும் சேர்ந்து கற்பதால், அதை கற்பவர்களின் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கிறது.
புதிய பாடத்திட்டம் அறிமுக விழாவில் பேசிய ‘அப்க்ராட்’ நிறுவனத்டின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் திரு. ரோனி ஸ்க்ரூவாலா [Ronnie Screwvala, co-founder & chairman, upGrad] பேசுகையில், “ஐஐடி மெட்ராஸ் நமது நாட்டின் முதன்மையான கல்விநிறுவனங்களில் ஒன்றாகும். தன்னுடைய புதுமையான மற்றும் முன்னோக்கு சிந்தனைக்கு பெயர் பெற்றது. ‘அட்வான்ஸ்ட் சர்டிஃபிகேஷன் மெஷின் லேர்னிங் & க்ளவ்ட்’ என்ற உயரிய சான்றிதழ் பாடத்திட்டத்தை’ தொடங்குவதில், ஐஐடி மெட்ராஸ் உடன் நாங்கள் இணைவதில் அப்க்ராட் பெருமிதம் கொள்கிறது. இன்னும் வரவிருக்கும் பல திட்டங்களில் இது முதலாவதாகும். இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு நம்முடைய வாழ்க்கையில் நீண்டகாலம் பங்காற்றும் என்பதால், இதைக் கற்பதற்கு இது மிகச்சரியான தருணமாகி இருக்கிறது. எனவே இந்த பாடத்திட்டத்திற்கு தேவையான, ஐஐடி மெட்ராஸின் ஆழ்ந்த நிபுணத்துவத்துடன், எங்களது தளத்தில் இந்த பாடத்திட்டத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”
அப்க்ராட் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் மயங்க் குமார் [Mayank Kumar, Co-founder & Managing Director, upGrad] கூறுகையில், “அப்க்ராட் நடத்திய நுகர்வோர் விருப்பத்தேர்வில் பதிலளித்தவர்களில் 54% பேர், டேடா மற்றும் இயந்திர கற்றல் துறை அல்லாமல் வேறு துறைகளில் பணியாற்றுபவர்களும் டேடா மற்றும் இயந்திர கற்றல் துறை மாற விரும்புகிறார்கள் என தெரிவித்திருக்கிறது. ஐஐடி மெட்ராஸுடன் இணைந்து நாங்கள் வழங்கும் பாடத்திட்டத்திற்கான அவசியத்தை இது உணர்த்துகிறது. இந்தத் திட்டம் இன்றைக்கு அதிகம் தேவைப்படும் திறன்களை வழங்கும், அதனால் இத்துறையில் தேர்ச்சிப்பெற்ற தொழில் வல்லுநர்கள் அவர்களின் வாழ்க்கையில் புதிய உயரங்களைத் தொட உதவும். நாட்டின் சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி மெட்ராஸுடனான எங்கள் கூட்டு முயற்சி, எங்களுடய தளத்தில் கற்பவர்களுக்கு தரமான கல்வியை அவர்களுக்கான செளகரியங்களுடன் வழங்க உதவும் ” என்றார்.
தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த முக்கிய தொழில்துறை தலைவர்களும், தற்போதுள்ள சிறந்த கல்வியாளர்களும் இயந்திர கற்றல் மற்றும் க்ளவ்ட் சான்றிதழ் திட்டத்தின் தொடர்பாக இருப்பவைப்பற்றியும், அவற்றின் தேவையையும் பற்றி விவாதித்தனர். உடல் ஆரோக்கியம், தகவல் தொழில்நுட்பம், வங்கி மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பல தொழில்களில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு சந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது போன்ற ஒரு பாடத்திட்டம் தொழில் வல்லுநர்கள் தங்களை தக்க வைத்துக் கொள்ளவதற்கான திறனை மேம்படுத்தவும், இந்தத் துறைகளில் சிறப்பாக பணியாற்றவும் உதவும்.

Faceinews.com