பிஎஸ்என்எல் தனது மொபைல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விழாக்காலச் சலுகைகள்

bsnl-759151

 

Faceinews Logo - Copy

BSNL தனது மொபைல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்
விழாக்காலச் சலுகைகள்

எதிர்வரும் விழாக்காலத்தை முன்னிட்டு, தனது வாடிக்கையாளர்கள் பயனுறும் வண்ணம் BSNL பல்வேறு நிரந்தர மற்றும் சிறப்புச் சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. அகில இந்திய அளவில் (PAN INDIA BASIS) இச்சலுகைகள் 28.09.2019 முதல் அமலுக்கு வருகிறது.

• அக்டோபர், 1 முதல் 31, 2019 வரை ப்ளான் வவுச்சர் ரூ.1699/-க்கான தற்போதைய வேலிடிட்டி நாட்கள் 365-லிருந்து 90 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியுடன் 455 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இச்சலுகை அக்டோபர் 2019 முழுவதும் அமலில் இருக்கும். இந்த ப்ளான் வவுச்சர் ரூ.1699/–ன் வேலிடிட்டி காலம் முழுவதும், தினமும் அன்லிமிட்டெட் டேட்டா (2GB FUP-யுடன்), வாய்ஸ் அழைப்புகள் (250 நிமிடங்கள்-FUP), 100 SMS மற்றும் இலவச காலர் ட்யூன் (365 நாட்களுக்கு எத்தனைமுறை வேண்டுமானாலும் மாற்றும் வசதியுடன்) கிடைக்கும்.
• புதிய வாடிக்கையாளர்களை வரவேற்கும் விதமாக ப்ளான் வவுச்சர்கள் 106 அல்லது 107 ஆக்டிவேட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் அழைப்புகள் (FUP 250 நிமிடங்களுடன்), மற்றும் தினமும் அன்லிமிட்டெட் டேட்டா (1GB FUP) இலவசமாக அளிக்கப்படுகிறது.
• 186 மற்றும் 187 ப்ளான் வவுச்சர்களுக்கு தினமும் 1GB டேட்டா கூடுதலாக அளிக்கப்படுகிறது. இதன்படி, 186 மற்றும் 187 ப்ளான் வவுச்சர்கள்களுக்கு தற்பொழுது தினமும் அன்லிமிட்டெட் வாய்ஸ் அழைப்புகள் (FUP 250 நிமிடங்களுடன்), 100 SMS தவிர, தினமும் அன்லிமிட்டெட் டேட்டாவும் (FUP 3GB-யுடன்) கிடைக்கும்.

தனது பாரம்பரியத்தை தொடர்ந்து கடைபிடித்துவரும் BSNL தனது வாடிக்கையாளர்களுக்கு விழாக்காலச் சலுகைகளை அளித்துள்ளது என BSNL-ன் இயக்குநர் (சி.எம்.), திரு. ஷீத்ல ப்ரசாத் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களை BSNL-ன் இணையதளம் www.bsnl.co.in மூலம் அறியலாம்.

Faceinews.com