ஹம்ஸா, ஒரு ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையம் துவங்கப்பட்டது

Kauvery Hospital - Launch of HAMSA - 01

Faceinews Logo - Copy

ஹம்ஸா, ஒரு ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையம் துவங்கப்பட்டது.
சென்னை, அக்டோபர், 2019: சென்னையின் புகழ்பெற்ற முதுகெலும்பு மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சை வல்லுனர்களில் ஒருவரான டாக்டர் திரு. G. பாலமுரளி அவர்களின் தலைமையில், முதுகெலும்பு மற்றும் நரம்பியல் கோளாறுகள்/பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்தில் ஹம்ஸா மையம் இன்று துவங்கப்பட்டது.

புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த மறுவாழ்வு மையத்தில் 20 படுக்கைகள் உள்ளன; இங்கு தண்டுவட பாதிப்புகள், மூளை பாதிப்புகள், பக்கவாதம், கழுத்து மற்றும் முதுகு வலி, செரிபிரல் பால்ஸி என்னும் பெருமூளை வாதம், மற்றும் பல நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவியும், சிகிச்சையும் அளிக்கப்படும்.
இருபது உள்நோயாளிகளுக்கான படுக்கைகளைக் கொண்ட ஹம்ஸா மையம், உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் மற்றும் தினசரி பராமரிப்பு சேவைகளை வழங்கும்.

Kauvery Hospital - Launch of HAMSA - 03

சென்னையில் முதல் முதலில் இம்மாதிரியான சேவைகளை பிரத்தியேகமாகவும் முழுமையாகவும் ஹம்ஸா மையம் வழங்குகிறது. மறுவாழ்வு சேவைகளோடு சேர்த்து கூடுதலாக பேச்சு மற்றும் முழுங்கும் சிகிச்சை, தொழில்சார் சிகிச்சை, சக ஆலோசகர், சமூக சேவகர், அறிவாற்றல் சிகிச்சை மற்றும் மனநல மருத்துவமும் வழங்கப்படுகிறது.
துவக்க விழாவில் பேசிய ஹம்ஸா மையத்தின் மேலான் இயக்குனரான டாக்டர் திரு. பாலமுரளி, அவர்கள் கூறியதாவது, “இந்தியாவின் மருத்துவத் தலைநகரான சென்னையில் முதுகெலும்பு மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்கென ஒரு முழுமையான மறுவாழ்வு மையம் இல்லை. சென்னையின் வளர்ந்து வரும் மக்கள்தொகையால், மறுவாழ்வு சிகிச்சைகளுக்கான தேவைகளும் அதிகரித்து வருகிறது. அதாவது மூளை, முதுகெலும்பு, எலும்பியல், குழந்தை மருத்துவம், முதியவர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின்னான பராமரிப்பு மையங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில், மருத்துவ சேவையில், ஹம்ஸா ஒரு புதிய அத்தியாயமாக துவங்கியுள்ளது.

Kauvery Hospital - Launch of HAMSA - 02

இதன் மூலம் நாங்கள் அனைவருக்கும் கட்டுப்படியாக்கூடிய செலவில் அறிவியல் ரீதியான, ஆதார-அடிப்படையிலான சிகிச்சைகளை வழங்கவுள்ளோம்.”
தண்டுவடம் மற்றும் மூளையில் ஏற்படும் கோளாறுகள் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவருடன் உடன் இருப்பவர்களின் வாழ்க்கையையே மாற்றும் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடியவை. பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கப்படும் மறுவாழ்வு சிகிச்சைகளின் மூலம் பாதிப்புக்குப் பின்னும், காயம் அல்லது சிகிச்சைக்குப் பின்னும் அவர்கள் சுதந்திரமான வாழ்வை பெற உதவ முடியும். மேலும் அவர்களுக்கு பாதிப்பிலிருந்து வெளிவரத் தேவையான நம்பிக்கையும், ஊக்கமும் அளிக்கப்படும். மறுவாழ்வு சிகிச்சை என்பது உடல், தொழில், மனம், சிந்தனை, பேச்சு, ஆன்மா, தொழில்சார் மற்றும் குழு-அடிப்படையிலான சிகிச்சைகளை உள்ளடக்கியதாகும்.
Rehabilitation will focus on:
மறுவாழ்வு என்பது கீழ்வரும் முறைகளில் கவனம் செலுத்துவதாகும்:
● சுய பராமரிப்பு மற்றும் சுதந்திரமாக தினசரி வேலைகளை செய்ய மறுமுறை கற்றல் பயிற்சி அளித்தால்.
● தொழில்சார் திறன்களை வளர்க்க உதவுவதன் மூலம் அவர்களது வாழ்வாதார தேவைகளை பூர்த்திசெய்து கொண்டு, சமூகத்தில் இயந்து வாழவும், கற்றுக்கொள்ளவும் முடியும்.
● அவர்களது குறைபாடுகளால் ஏற்படும் சிக்கல்களை இனிவரும் காலங்களில் எப்படி சமாளிப்பது என்ற பயிற்சி அளித்தல்.
உடலியல் மற்றும் மருத்துவ மறுவாழ்வு நிபுணர், நரம்பியல் மற்றும் முதுகெலும்பு அறுவைசிகிச்சை வல்லுனர், சிறுநீரக மருத்துவர், மனநல மருத்துவர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க மருந்து நிபுணர், வலி நிபுணர் மற்றும் பிசியோதெரபிஸ்ட், தொழில் சிகிச்சை, செவிலியர்கள், உளவியலாளர், பேச்சு சிகிச்சையாளர், எலும்பியல் நிபுணர், தொழில் பயிற்சியாளர், சக ஆலோசகர் மற்றும் மாற்று மருத்துவ நிபுணர்; ஆகியோரை கொண்ட வல்லுனர்களின் குழுவின் உதவியோடு, ஹம்ஸா தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும்.
கூடுதலாக, ஹம்ஸா மறுவாழ்வு மையத்தின் ஒரு பகுதியான ஹம்ஸா அறக்கட்டளையின் மூலம் வசதிவாய்ப்பற்றவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும். அனைவருக்கும் சமமான வாய்ப்பளிக்கும் விதத்தில், சிகிச்சையின் அவசியம் உடையவர்களை அறக்கட்டளையின் உறுப்பினர்களான குழு உறுப்பினர்கள் கண்டறிந்த பின், இலவச சிகிச்சை வழங்கப்படும்.

Faceinews.com