புதியதலைமுறை சக்தி விருதுகள்

2L0A1534

அச்சம்நாணம்மடம்பயிர்ப்பு உடைத்து சாதிக்கப் பிறந்த பெண்களை கொண்டாடும் விதமாகமகளிர் தினத்தை முன்னிட்டு புதியதலைமுறை சக்தி விருதுகள் வழங்கப்பட்டன.

Faceinews Logo - Copy

இசையமைப்பாளர் ஜனனி இசையமைத்துப் பாடியிருந்த பாரதியாரின் பாடலுக்கு அத்வைதா குழுவினரின் நடனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. இவ்விழாவில் நடிகையர் ரோஹிணி, கஸ்தூரி, பிண்ணனிப் பாடகி பி.சுசீலா, தொகுப்பாளினி திவ்யதர்ஷிணி உள்ளிட்ட பிரபலங்களும் பல்வேறு கட்சித் தலைவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

2L0A1339

பல் துறை  சாதனையாளர்கள் அடங்கிய குழுவும், புதியதலைமுறை குழுமமும் இணைந்து தலைமை, புலமை, துணிவு, திறமை, கருணை, சாதனை என்ற  ஆறு வெவ்வேறு பிரிவுகளில்  சக்தி விருதுக்கான  பெண்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கினார்கள்.

ஊடகத்துறையில் வெற்றிப்பயணத்தை மேற்கொண்டு சீரிய தலைமைப் பண்பால் பாரம்பரிய இந்து இதழ் குழுமத்தை ஊடக அறம் பிறழாமல் வழி நடத்திக் கொண்டிருக்கும் திருமிகு மாலினி பார்த்தசாரதி அவர்களுக்கு தலைமைக்கான விருது வழங்கப்பட்டது.

2L0A1024

முதிர்நிலை மக்களுக்கு நம்பிக்கை ஒளிகாட்டியும் ஆனந்த இல்லம் மூலம் முதியோரைக் காத்தும் ஏழை மாணாக்கர்களுக்கு இலவசக்கல்வி உதவி அளித்தும் கடைநிலைக் கிராம மக்களுக்கு மருத்துவச் சேவையும் செய்து வரும் திருமிகு.பாகீரதி இராமமூர்த்தி அவர்களுக்கு கருணைக்கான விருது வழங்கப்பட்டது.

பத்து வயதிலேயே தமிழ்நாட்டு அணிக்காக பந்தாடத் தொடங்கி உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மட்டைப் புரட்சி செய்து சிறந்த ஆட்டக்காரர் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தால் மூன்று முறை தேர்வு செய்யப்பட்டு இந்தியாவின் முதல்நிலை ஆட்டக்காரராய் ஐந்துநாள், ஒருநாள் மற்றும்  T20 ஆகிய பல பிரிவுகளிலும் ஆடி வரும் திருமிகு. திருஷ்காமினி அவர்களுக்கு திறமைக்கான விருது வழங்கப்பட்டது.

2L0A1181-2

உச்சி மீது விழுந்த வானைத் துச்சமென மதித்து நீதிகாக்க அற்றம் வரை உறுதியுடன் நின்று தன்னம்பிக்கையுள்ள மனுசியாய், காதலின் உயர் சாட்சியாய் அஞ்சாமல் நடைபோட்டுக் கொண்டிருக்கும் திருமிகு. கெளசல்யா சங்கருக்கு துணிவுக்கான விருது வழங்கப்பட்டது.

பத்தாயிரத்திற்கும் மேலான திரை இசைப்பாடல்கள், ஆன்மிகம், கஜல் உள்ளிட்ட தனி இசைத் தொகுப்புகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி, ஒடியா என்று பன்மொழிகளில் நாற்பதாண்டுகளாக இசைப்பணியாற்றி வரும் திருமிகு வாணிஜெயராம் அவர்களுக்கு புலமைக்கான விருது வழங்கப்பட்டது.

தாய்மைப் பேறு கிட்டாமல் தவிக்கும் தாய்மார்களுக்கு சோதனைக் குழாய் வழிக்கருவறை உருவாக்கி மகப்பேறுக்கான மாற்றுப்பாதை அமைத்தும் குழந்தைப் பேறுக்காக பல நுட்பங்களைக் கையாண்டு தொடர் சாதனை படைத்து தாய்மையைப் பாதுகாத்து வரும் திருமிகு கமலா செல்வராஜ் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கப்பட்டது.

இறுதியாக பல்வேறு கட்சித்தலைவர்கள் சாதனையாளர்களை வாழ்த்திப் பேசியபின் நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவுற்றது.

Faceinews.com