ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை என்ற பெயரில் ஒரு அறை அமைக்கப்பட்டிருக்கும். அந்த அறை, பெண்களின் உழைப்பை அதிகம் கேட்கக்கூடிய இடமாக இருக்கிறது. பெண்களின் சிந்தனையை அதிகளவில் ஆக்கிரமித்திருக்கும் அறையாகவும் திகழும் இந்த சமையலறையிலிருந்து பெண்களுக்கு விடுதலையளிக்கவேண்டும் என்று உணவுத்துறை விஞ்ஞானிகள், ஏனைய தொழில்நுட்ப துறையினருடன் இணைந்து இன்றளவிலும் போராடி வருகிறார்கள். அவர்கள் மிக்சி, கிரைண்டர், ஜுஸ் மேக்கர், காபி மேக்கர், காய்கறிகளை வெட்டும் கருவி, இன்டக்ஷன் ஸ்டவ் என தனித்தனியாக கருவிகளைக் கண்டுபிடித்து பெண்களுக்கு உதவி செய்தாலும், அவர்கள் சமையலறையில் செலவிடும் நேரத்தைக் குறைக்க முடிவதில்லை. வீட்டுச் சாப்பிட்டிற்காக ஏங்குபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பிடித்த உணவுகளை சாப்பிடுவதற்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைத்து சாப்பிட்டாலும் அதில் கிடைக்கும் சுவை, நாம் எதிர்பார்ப்பதைவிட குறைவாகத்தான் இருக்கிறது. சுவையாக இருக்கிறது என்று நம்பி பிரபலமான உணவகங்களுக்கு சென்றால், அங்கு ஒரு நாள் கிடைக்கும் சுவையான உணவுப் பொருள், மறுமுறை அதே சுவையுடன் கிடைப்பதில்லை. இதற்காக அங்குள்ள சமையல் கலைஞர்களை குறைச்சொல்வது நேரவிரயம் தான். சுப நிகழ்வுகளுக்கு விருந்தினர்களை அழைத்து, அனைவருக்கும் சுவையான உணவு வகைகளை பரிமாற திட்டமிட்டு, பிரபலமான சமையல் கலைஞர்கள் ஒப்பந்தம் செய்கிறோம். ஆனால் அவர்களின் கைப்பக்குவம் அன்றைய தினம் எதிர்பார்த்ததைப் போல் அமையவில்லை. இந்நிலையில் உடனடியாக ஒரே நேரத்தில் அனைவருக்கும் சுவையான உணவு வகைகளை தயார் செய்யவேண்டும் என்றால்…அது நடைமுறையில் சாத்தியமில்லை என்ற போக்கு தான் நீடிக்கிறது. இந்நிலையில் மக்கள், சுவையாகவும், ஆரோக்கியமாகவும், சுகாதாரமுறையில் தயாரிக்கப்பட்டதாகவும் இருக்கவேண்டும் என்றும், அவை விரைவில் கிடைக்கவேண்டும் என்றும், சுவை என்பது ஒரே அளவில் எப்போதும் மாறாததாக இருக்கவேண்டும் என்றும் எண்ணுகிறார்கள். இந்த எண்ணத்தை செயலாக்குவதற்காக அறிமுகப்படுத்தப்படுவது தான் ‘ரோபோசெஃப்’. இந்தியாவில் முதல் சமைக்கும் எந்திர மனிதன். இது குறித்து இந்ந இயந்திர மனிதனை வடிவமைத்த குழுவின் தலைவரும், ரோபோசெஃப் நிறுவனத்தின் உரிமையாளருமான சரவணன் சுந்தரமூர்த்தி பேசுகையில்,“மென்பொருள் நிபுணராக நான் பதினோரு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, உணவுத்துறையில் ஏதேனும் சாதனை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னுடைய குழுவினருடன் இணைந்து ஆய்வு செய்து, இந்த ரோபோசெஃப் என்ற இயந்திர மனிதனை வடிவமைத்திருக்கிறோம் இந்த இயந்திர மனிதன் அறுநூறு வகையான ரெசிபிகளை சமைக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறோம். அதில் இந்தியன், சைனீஸ், வியட்நாமீஸ், தாய்லாந்து நாட்டு உணவுவகைகள் என பல நாட்டு உணவுகளையும் சமைக்கும் வகையில் தயாரித்திருக்கிறோம். இதன் மூலம் தினமும் 3,000 நபர்களுக்கு சமைத்து, விநியோகிக்கிறோம். நாம் பசியின் போதோ அல்லது பயணங்களின் போதோ சாப்பிடவேண்டும் என்று எண்ணி, பிரபலமான உணவகங்களில் சாப்பிடச் சென்றாலும், அங்கு உணவின் தர நிலை என்பது எப்போதும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. இன்று ஏராளமானவர்கள் சமையலுக்கான நேரத்தை ஒதுக்குவதை விரும்புவதில்லை. சமையல் என்பது அதிக நேர உழைப்பை கேட்கும் விசயமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் அந்த வீட்டின் இல்லத்தரசி சமையலுக்காக தினமும் குறைந்தபட்சம் ஆறு மணிநேரத்தை ஒதுக்கவேண்டியதிருக்கிறது. உணவகங்களில் காலையில் உணவு பரிமாறவேண்டும் என்றால் அங்குள்ள ஊழியர்கள் அதிகாலை மூன்று மணயளவில் எழுந்து, காலை உணவை தயாரிக்கவேண்டியதிருக்கும். அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான பணியை தொடர்ந்து செய்வதால், சலிப்பு ஏற்படுகிறது. அது சுவையிலும் எதிரொலிக்கிறது. இதனால் காலை உணவிற்கான சுவையை எதிர்பார்த்து வரும் பயனாளர்களுக்கு ஏமாற்றமளிக்கிறது. இது தான் யதார்த்தம். இதனை மாற்றியமைக்கவேண்டும் என்றும், ஒரே மாதிரியான சுவையுடன் அனைவருக்கும் , அவரவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை சமைக்க வேண்டும் என்பதும், அதனை முழுவதும் தானியங்கி அடிப்படையில் தயாராகவேண்டும் என்பதும் தான் ரேபோ செஃப்பின் வடிவமைப்பின் உந்துதலாக இருந்தது. மனிதர்களின் உதவியின்றி இயந்திரத்தால் எவ்வளவு தூரம் சமையலில் ஈடுபடுத்த முடியும் என்பதை தொடர்ந்து ஆய்வு செய்தோம். வடிவமைத்த பின்னர் சமையலுக்கு செலவிடும் நேரம் குறைந்திருப்பதை உறுதி செய்தோம். ஒரே மாதிரியான சுவையை அனைத்து விதமான உணவு வகைகளிலும் அளிக்க முடியும் என்பதையும் உறுதிப்படுத்தினோம். உதாரணத்திற்கு மதுரை சிக்கன் பிரியாணியை எங்களுடைய ரோபோ செஃப் சமைத்தால், மதுரை, இந்தியா மட்டுமல்லாமல் உலகின் வேறு எங்கு சுவைத்தாலும் ஒரே மாதிரியான சுவையைத்தான் தரும். இது ரோபோசெஃபின் மிகப்பெரும் பலன் என்று கூறலாம். ஆறாண்டிற்கு முன்னர் எங்களுடைய குழுவினர் உணவுத்துறையில் ஈடுபட திட்டமிட்டோம். நாங்கள் நடத்திவரும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ரோபோடீக் பிரிவு எனப்படும் இயந்திர மனிதனை உற்பத்தி செய்யும் பிரிவும் உண்டு. நாங்கள் இயந்திரவியல் துறையில் தானியங்கி முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். முப்பரிமாண அச்சு இயந்திர கருவியை முழுமையாக தானியங்கி முறையில் வடிவமைத்திருக்கிறோம். இந்நிலையில் தானியங்கி தொழில்நுட்பத்தை எப்படி மக்களின் தேவைக்கான துறையில் அறிமுகம் செய்வது என்று எண்ணினோம். இன்றைய சூழலில் தானியங்கி என்ற தொழில்நுட்பம் கார்ப்பரேட் நிறுவனங்களிலும், எண்டர்பிரைசஸ் நிறுவனங்களிலும் மட்டும் பயன்பாட்டில் இருக்கிறது. இந்நிலையை மாற்றி ஏன் இதை வீடுகளுக்கு எடுத்துச் செல்லக்கூடாது என்ற கோணத்தில் யோசித்தோம். ஆனால் இதன் தொடக்க நிலையில் ஏராளமான தடங்கல்கள் ஏற்பட்டன. என்னுடைய துறையைச் சார்ந்த நண்பர்கள், தானியங்கி எனப்படும் ரோபோடீக் துறையில் வல்லவராக இருக்கும் உங்களால் முழுக்க முழுக்க சமையல் செய்யும் எந்தி மனிதனை உருவாக்க முடியுமா? என சாதாரணமாகவும், நகைச்சுவையாகவும் கேட்டார்கள். அதன் பிறகு இதற்கான முயற்சியைத் தொடங்கினோம். தற்போது நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் ரோபோசெஃப் பதினெட்டாவது ஹார்ட்வேர் வெர்ஷன். ஒவ்வொரு முறையும் பிரத்யேகமான முறையில் மீண்டும் மீண்டும் ரீடிசைன் செய்து கொண்டேயிருந்தோம். இந்த துறையில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்களே இது குறித்து ஆய்வு நிலையிலேயே இருக்கும் போது உங்களால் மட்டும் எப்படி சாத்தியப்படும்? என்றார்கள். ஆனால் ஒன்றை நினைத்து அதில் முழு மனதுடன் பணியாற்றி வெற்றிகிடைக்கும் என்ற மனநிலையில் குழுவாக இணைந்து கடினமாக பணியாற்றியதால் இதனை உருவாக்க முடிந்தது. இந்த தருணத்தில் இதற்காக உழைத்த என்னுடைய குழுவினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ரோபோசெஃப்பை பொறுத்த வரை நாங்கள் இரண்டு வகையான ரோபோவை அறிமுகப்படுத்துகிறோம். ஒன்று வணிக நோக்கம் கொண்டது. மற்றொன்று ரோபோசெஃப் மினி. இது இல்லத்தரசிகளுக்கு ஏற்றது. ரோபோசெஃப்பில் 600 வகையான ரெசிப்பிகளை செய்யமுடியும். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி,சாம்பார், ரசம், சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல் என அறுநூறுக்கும்.
Corporate
Google announces new mode for Google Go to help people browse the web more privately Chennai, Oct 2019. Google announces...
Read more »
GoAir enhances connectivity with new flights from Bengaluru and Kolkata to Delhi Adds non-stop flight from & to Kolkata –...
Read more »
CELEBRATES THE SWEETNESS OF DIWALI THIS YEAR WITH EMIRATES Emirates ushers in the festive season by treating passengers in all...
Read more »
Once again GoAir shinesin On-Time Performance DGCA ranks GoAir number one in on-time-performance for September 2019 13th month in a row...
Read more »
Early Diwali for Hathway Customers New Delhi , October 2019 : Hathway is the Pioneer of cable and broadband...
Read more »
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா, இந்திய சொகுசு கார் சந்தையில் முன்னிலை தொடர்ந்து வகிக்கிறது: சென்னையில் இந்நிறுவனம் சொகுசு கார்களுக்கான மிகப் பெரிய ஒருங்கிணைந்த டீலர்ஷிப் ஷோரூம் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது! ü சொகுசு கார் பிராண்டில், தொடர்ந்து 5 ஆண்டுகளாக 10,000 சொகுசு கார்களை உற்பத்தி செய்த ஒரே நிறுவனம் என்ற சாதனையை தக்க வைத்துள்ளது. · மெர்சிடிஸ் பென்ஸ் – சுந்தரம் மோட்டார்ஸ் தற்போது தமிழ்நாட்டில் மிகப் பெரிய 3 எஸ் டீலர்ஷிப் [3S luxury car dealerships] நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது · சுமார் 72 ஆயிரம் சதர அடி பரப்பளவில், மிகவும் விசாலமாக அதிநவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது | திறன் பயிற்சி பெற்ற 136 ஊழியர்கள் | 6 கார் பார்வைப்பகுதிகள் (car display) 63 சேவை தளங்கள் (service bays) | இந்த டீலர்ஷிப் 5 மாத காலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது | ஆண்டுக்கு 15 ஆயிரம் கார்களை சர்வீஸ் செய்யும் ஆற்றல், வசதிகளைக் கொண்டது. · அதிநவீன 3 எஸ் வசதிகள் ஆட்டோமொபைல் மையமான சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் மிக எளிதில் அணுகக்கூடிய முக்கிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. · இன்றைய நவீன சொகுசுத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனம், இந்த டீலர்ஷிப் நிலையத்தின் உட்புற அலங்கார வடிவமைப்பை மிக அழகியலுடன் வடிவமைத்துள்ளது Ø எம்பி டிஜிட்டல் சைனேஜ் சிஸ்டம் (MB DIGITAL SIGNAGE) வசதி இங்கு உள்ளது: இந்த ஷோரூமின் உட்பகுதி அலங்கார வடிவமைப்புகள் பாரம்பரிய அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன Ø ஷோரூம் சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் உள்ளூர் தொடர்பான முக்கிய அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில், தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் எடுத்துரைக்கிறது...
Read more »
GoAir launches non-stop flights to Singapore from Bengaluru & Kolkata, introduces non-stop flights to Aizawl Commences non-stop flights to and...
Read more »
Emirates celebrates Diwali with discounted fares to popular destinations Discounts will be made for fares to featured destinations in the...
Read more »
GoAir adds 12 flights to its ever-growing network Non-stop flights between Delhi and Chandigarh, with fares starting from Rs...
Read more »

