வார்டன்னா கொட்டுவோம் இன்னைக்கு வரைக்கும் ஷோஸியல் மீடியாவில் மீம் கிரியேட்டர்களின் ட்ரெண்டிங் வார்த்தை இது. ஷோஸியல் மீடியா இல்லாத காலகட்டத்திலும் அந்த காமெடி அத்தனை பேர் மனசிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் காமெடி.
பவன் எண்ணிக்கையில் இது வரை தமிழ், தெலுங்கு, மலையாளம் என 90 படங்களில் நடித்திருக்கிறார். இதில் “செங்காத்து பூமியிலே”, “காலகட்டம்”, “விலாசம்” மூன்று படங்கள் ஹீரோவாக நடித்த படங்கள்.
சில வருடங்களுக்கு முன் தமிழ்சினிமாவில் மிகப்பெரும் வெற்றி பெற்ற மாசிலாமணி, இங்கிலீஷ்காரன், கலாபக்காதலன், திமிரு, பீமா, சூரியன் சட்டக் கல்லூரி, பொல்லாதவன், கதகளி, வீரம் என பவன் நடித்த மேக்ஸிமம் படங்கள் ஹிட் லிஸ்டில் தனித்த இடம் பிடித்த படங்கள்.
தற்போது தமிழில் தம்பி ராமையாவின் “மணியார் குடும்பம்” படத்தில் காமெடி கலந்த வில்லன் கேரக்டரிலும், “அழகுமகன்” படத்தில் மெயின் வில்லனாகவும், சமுத்திரகனியின் “நாடோடிகள் 2”, வெற்றி மாறனின் “வடசென்னை” என அடுத்தடுத்து ரிலீஸ்க்கு ரெடியாக நான்கு படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. சமீபத்தில் பவன் தெலுங்கில் நாகசைதன்யாவுடன் நடித்த “யுத்தம் சரணம்” ஆந்திராவில் வசூலை அள்ளியது.
பொல்லாதவன் படத்தில் அவுட்டு கேரக்டர் தனித்து அப்போது பேசப்பட்டது, அதுபோல வடசென்னை படத்தில் வேலு என்னும் கேங்ஸ்டர் ரோல். இதுவரை பார்த்த பவனின் வேறு ஒரு பரிணாமம் வேலு கேரக்டர் நிச்சயம் பேசப்படும் ரோல் அது.
ஹீரோ, காமெடியன், வில்லன், குணசித்திர நடிகர் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை பாத்திரமாக மாற்றும் வல்லமை பெற்றவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ரகுவரன், பிரகாஷ் ராஜ், பவன் என சிலருக்கு மட்டுமே அது சாத்தியப்பட்டது.
சின்ன கேரக்டர் என்றாலும், அது ஆடியன்ஸ் மனசில் நிற்கும் கேரக்டர் என தெரிந்தால் அடுத்த செகண்ட் அந்தப்படத்தில் நடிப்பேன் என கூறுகிறார் பவன்.
மக்கள் தொடர்பாளர் ராஜ்குமார்