4 பெரிய படங்களுடன் வெளிவரும் புதியவர்களின் “யாகன்”
“ஆக்ஷன் ரியாக்ஷன்” நிறுவனம் வழியாக “ஜெனீஷ் வீரபாண்டியன்” தமிழகமெங்கும் வெளியிடும் இப்படத்தை இன்று (5 ஆம் தேதி) ஜாம்பவான்களுடன் நம்பிக்கையாக வெளியிடுவதற்கான காரணமாக , “தந்தை மகன்” பாசப்பிணைப்பை அழகாக சொல்லும் இக்கதை மக்களால் அன்புடன் ஏற்றுக்கொள்ளப்படும் என்கின்றனர் படக்குழுவினர்.
“டென்மார்க்” இல் வசிக்கும் தமிழர் “யோகராஜா” இப்படத்தில் தன் மகன் “சஜன்” ஐ நாயகனாக்கி அழகுபார்த்திருப்பது இக்கதையின் இயல்புடன் இணைந்த இன்னொரு அழகு.
இப்படத்தின் பாடல்களை கவிஞர் கபிலன் , கவிஞர் பத்மாவதி மற்றும் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் ஆகியோர் எழுதியுள்ளனர்.
இசை : நிரோ பிரபாகரன்
ஒளிப்பதிவு : மகேஷ்
படத்தொகுப்பு : சரண் சண்முகம்
நடனம் : எஸ் வி, ஜாய்மதி ,அசார்
சண்டைப்பயிற்சி : டேஞ்சர் மணி
மக்கள் தொடர்பு : A.ஜான்
இயக்கம் : வினோத் தங்கவேல்
கதை சொல்ல போறோம் , இலை , போன்ற நல்ல திரைப்படங்களின் வரிசையில் தரமான படைப்புகள் சரியான வகையில் மக்களிடம் சேர்ந்து திரையரங்க வருவாய் மட்டுமின்றி இதர வருவாய் வாய்ப்புகளாகிய வெளிநாட்டு உரிமை ,மொழிமாற்று உரிமைகள், டிஜிட்டல் உரிமை வணிகம் வழியாகவும் தயாரிப்பாளர்கள் இலாபமீட்டுவதற்கும் உறுதுணையாக விளங்கும் “ஆக்ஷன் ரியாக்ஷன்” நிறுவனத்தின் பங்களிப்பு சிறிய படங்களை வெளியிட இருக்கும் நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டாலும் வந்தாரை வாழவைக்கும் நம் மண்ணில் இந்த யாகனையும் வரவேற்று தொடர்கிறது.
நிஜ தந்தை மகன் பிணைப்புடன் திரையிலும் ஜெயிக்க நம் நாடு நாடி நம்பிக்கையுடன் வந்திருக்கும் நம் தொப்புள் கொடி உறவான இந்த “யாகன்” தந்தை மகன் மட்டுமின்றி மற்றவர் மனமும் கவர்வான் என நம்புவோம்.