எஸ் ஆர் எம் 15 வது பொறியியல் பட்டமளிப்பு விழா— 9010 மாணவ மாணவியருக்கு வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் பட்டங்கள் வழங்கினார்

Photo_1-1560x1040

Faceinews Logo - Copy

எஸ் ஆர் எம் 15 வது பொறியியல் பட்டமளிப்பு விழா— 9010 மாணவ மாணவியருக்கு வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் பட்டங்கள் வழங்கினார் — ஐஎஸ்ஆர்ஒ இயக்குனர் ஏ.ராஜராஜன் சிறப்புரை

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற 15வது பொறியியல் பட்டமளிப்பு விழாவில் பிஎச்டி பட்டதாரிகள் 90 பேர் உட்பட 9010 மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். இதில் அணுசக்தி ஆணையத்தின் தலைவரும் மத்திய அரசின் அணுசக்தி துறை செயலாளருமான முனைவர் கே.என். வியாசுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஶ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் வின்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஏ.ராஜராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

எஸ்ஆர்எம் உயர் கல்வி நிறுவனத்தின் 15வது பொறியியல் பட்டமளிப்பு விழா காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ ஆர் எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் டி.பி.கணேசன் அரங்கில் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் சேர்மன் ரவி பச்சமுத்து, தலைவர் டாக்டர் பி,சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைவேந்தர் முனைவர் சந்தீப் சன்சேத்தி வரவேற்று நிறுவனத்தின் ஆண்டறிக்கை வாசித்தார்.

Photo-1368x912

பட்டமளிப்பு விழாவிற்கு எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்கள் நிறுவனர் மற்றும் வேந்தரும் பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் தலைமை வகித்து அணுசக்தி கமிஷன் தலைவரும் மத்திய அரசின் அணுசக்தி துறை செயலாருமான முனைவர் கே.என்.வியாசுக்கு டாக்டர் ஆப் சயின்ஸ் என்ற கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தார். மேலும் ஆராய்ச்சி மாணவ மாணவியர் 90 பேருக்கு பி.எச்டி பட்டமும், பி.டெக் படிப்பில் 8777 பேருக்கும், பி.ஆர்க் படிப்பில்119 பேருக்கும், பி.டிசைன் படிப்பில் 24 பேர் ஆக 9,010 பேருக்கு பட்டங்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற முனைவர் கே.என்.வியாஸ் ஏற்புரை வழங்குகையில் 1876ம் ஆண்டில் அணுசக்தி கண்டுபிடிக்கபட்டது.1903ல் அணுசக்தியுடன் தொடர்புடைய பெளதிகம் ரசாயனம் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு நோபல் விருது வழங்கப்பட்டது.

அணுசக்தி மூலம் மின்உற்பத்தி செய்வது அபாயகரமானது கதிர்வீச்சு ஏற்பட்டால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்ற எண்ணம் உள்ளது. இது தவறானது.அணு மின்உற்பத்தி மிகவும் பாதுகாப்பன முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது, அதற்கு ஏற்ற வகையில் அணு உலைகளை விஞ்ஞானிகள் பாதுகாப்பான முறையில் வடிவமைத்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி அனல் மின் உற்பத்தி மாசு ஏற்படுத்த கூடியது. ஆனால் அணு மின் உற்பத்தி மாசு இல்லாமல் சுற்று சூழலுக்கு ஏற்ற வகையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும் உயிர் காக்கும் மருந்து மாத்திரைகள் ஊசிகள் தயாரிக்க தேவையான ஆராய்ச்சிகளை அணுசக்தி துறை மேற்கொண்டு வருகிறது.இது சரியான நேரம் இன்று பட்டம் பெறும் நீங்கள் உங்கள் முழு ஆற்றலையும் ஆராய்ச்சி பணியில் ஈடுபடுத்திட வேண்டும் என்றார்.
இந்கழ்ச்சியில் ஶ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் வின்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் விஞ்ஞானி ஏ.ராஜராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேர்வில் சிறப்பிடம் பெற்ற113 மாணவ மாணவியருக்கு தங்கம்,வெள்ளி மற்றும் வெங்கல பதக்கங்கள் வழங்கி பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தி பேசியதாவது:
நாட்டில் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியாக உள்ளது. வின்வெளி துறைக்கும் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்திற்கும் நல்ல தொடர்பு உள்ளது, இந்நிறுவனத்தின் மாணவர்கள் பெங்களூர் வின்வெளி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வின்னில் செலுத்தப்பட்ட செயற்கைகோள் நல்ல நிலையில் இயங்கி வருகிறது.

இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகில் வளர்த நாடுகளுக்கு இணையாக வின்வெளி ஆராச்சியில் சிறப்பிடம் பெற்றுள்ளது. வின்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் உதவும் வகையிலும் புயல் எச்சரிக்கை, நீர் ஆதரங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி பணிகளை செய்து வருகிறது. இந்திய நாடு நிர்வாக திறன் மிக்க மிகப்பெரிய நாடாகும்.ராணுவம், கல்வி, தொழில் துறைகளில் சிறந்த நாடாக விளங்குகிறது.

பட்டம் பெற்ற நீங்கள் சிறந்த ஆராய்ச்சியாளர்களாக தொழில் முயல்வோராக உருவாக வேண்டும், சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்ற லட்சியம் உங்களிடம் இருக்க வேண்டும் என்றார்.
பட்டமளிப்பு விழாவில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இணை துணைவேந்தர்கள் முனைவர் டி.பி.கணேசன், முனைவர் ஆர்.பாலசுப்பிரமணியன், பதிவாளர் என்.சேதுராமன் நிர்வாக குழு உறுப்பினர் முனைவர் ராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Photo Caption: எஸ்ஆர் எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய அணுசக்தி கமிஷன் தலைவர் மற்றும் அணுசக்தி துறை செயலாளர் முனைவர் கே.என்.வியாஸுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் எம்.பி வழங்கினார்.உடன் ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்இயக்குனர் முனைவர் ராஜராஜன்,நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பி.சத்தியநாராயணன்,துணை வேந்தர் முனைவர் சந்தீப் சன்சேத்தி,பதிவாளர் முனைவர் என்.சேதுராமன் ஆகியோர் உள்ளனர்.

Faceinews.com