எனது அடுத்த படங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பம்ச தொழிற்நுட்பங்களுடன் வெளியிட முயற்சி செய்வேன்- இயக்குனர் பா இரஞ்சித்

IMG-20191214-WA0076

Faceinews Logo - Copy

எனது அடுத்த படங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பம்ச தொழிற்நுட்பங்களுடன் வெளியிட முயற்சி செய்வேன்- இயக்குனர் பா இரஞ்சித்
Navigator, Better World Sheltor For Women With Disabilities மற்றும் Friends Of December 3 Movement ஆகிய அமைப்புகள் இணைந்து மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணைந்து, அவருடைய தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” திரைப்படத்தின் சிறப்புக் காட்சியானது மாற்றுத் திறனாளி குழந்தைகளிக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

IMG-20191214-WA0077

இந்த நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித், இயக்குநர் அதியன் ஆதிரை, நடிகர் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

“மாற்றுத் திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் நாம் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். அவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் கூட முழுமையானதாக இல்லை என்பதை அவர்களிடம் பேசியதிலிருந்து புரிந்து கொண்டேன்.

IMG-20191214-WA0078

எனது அடுத்த திரைப்படங்களில் காதுகேளாத, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பம்ச தொழிற்நுட்பங்களை வைத்து வெளியிட முயற்சி செய்வேன்” என்று பேசினார் இயக்குநர் பா.இரஞ்சித்.

Faceinews.com