கவின்கேர் – ன் “புத்தாக்க ஹேர் கலர் பிராண்டான இன்டிகா” அதன் பிராண்டு தூதர்களாக நடிகர்கள் அக்‌ஷய்குமார் மற்றும் இலியான டிக்ரூஸ் – ஐ நியமனம் செய்திருக்கிறது

photo

Faceinews Logo - Copy
கவின்கேர் – ன் “புத்தாக்க ஹேர் கலர் பிராண்டான இன்டிகா” அதன் பிராண்டு தூதர்களாக நடிகர்கள் அக்‌ஷய்குமார் மற்றும் இலியான டிக்ரூஸ் – ஐ நியமனம் செய்திருக்கிறது

சென்னை, ஜனவரி 2020: 2008 ஆம் ஆண்டில் 10 நிமிடத்தில் ஹேர் கலரிங் என்ற சிறப்பான, புதுமையான செயல்முறையை அறிமுகம் செய்ததன் வழியாக இந்திய ஏர்கலர் துறையை புரட்சிகரமாக மாற்றிய தனது பிரபல பிராண்டான இண்டிகாவின் புதிய பிராண்டு தூதர்களாக இந்தியாவின் பிரபல நடிகர்களான அக்‌ஷய்குமார் மற்றும் இலியானா டி’க்ரூஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருப்பதை இந்தியாவில் எஃப்எம்சிஜி துறையில் பெருநிறுவனமாக திகழும் கவின்கேர் அறிவித்திருக்கிறது.

10 நிமிடங்களில் ஹேர் கலரிங் என்ற புதுமையான செயல்முறை அறிமுகத்தின் மூலம் தென்னிந்தியாவில் சந்தையில் முதலிடம் பிடித்திருக்கும் இன்டிகா, ஹேர் கலர் துறையில் இந்தியாவின் மிக வலுவான நிறுவனமாக திகழ தயார்நிலையில் அனைத்து தகுதிகளுடனும் இருக்கிறது. அம்மோனியா இல்லாத ஹேர் கலரான இன்டிகா ஈசி, தானாகவே செய்து கொள்ளக்கூடிய தயாரிப்பான 10 நிமிட ஷாம்பூ ஹேர்கலர், இன்டிகா க்ரீம் – 10 நிமிட க்ரீம் ஹேர் கலர் மற்றும் இன்டிகா 10 நிமிடங்கள் பவுடராக கிடைக்கக்கூடிய ஒரே ஹேர்கலர் ஆகியவற்றை இத்தயாரிப்பு அணிவரிசை கொண்டிருக்கிறது. நுகர்வோர்களுக்கு அதிவேக மற்றும் அதிஎளிதான ஹேர்கலரிங் தீர்வாக இன்டிகாவை இது நிலைநிறுத்தியிருக்கிறது. நாடெங்கிலும் இன்டிகா ஹேர்கலர் பல்வேறு வண்ணங்களிலும் (ஷேடு) கிடைக்கிறது.

இந்நிறுவனத்தின் பர்சனல் கேர் மற்றும் அலையன்சஸ் பிரிவின் இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலரான திரு. வெங்கடேஷ் விஜயராகவன், புதிய தூதர்கள் நியமனம் குறித்து கருத்து தெரிவிக்கையில். “கடந்த பல ஆண்டுகளாக இன்டிகா அதிவேகமாக வளர்ச்சி கண்டுவருகிறது மற்றும் அதன் வளர்ச்சியை இன்னும் துரிதமாக்குகின்ற நிலையில் இப்போது இருக்கிறது. இன்டிகா பிராண்டை பிரதிநிதித்துவம் செய்ய நடிப்புத்திறன் மிக்க மற்றும் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர்களான அக்‌ஷய்குமார் மற்றும் இலியானா டி’க்ரூஸ் – ஐ அதன் தூதர்களாக கொண்டிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்டிகா பிராண்டின் கற்பனைத் தோற்றத்திற்கு உகந்த பிரதிநிதித்துவ நபர்களாக இருப்பதன் மூலம் இந்த பிராண்டையும் மற்றும் இதன் மைய மதிப்பீடுகளையும் மிக நேர்த்தியாக பிரபலப்படுத்துகின்றனர். ஸ்டைல், இளமையின் சக்தி மற்றும் புத்தாக்க நடிப்புத்திறன் ஆகியவற்றின் மிகச்சரியான கலவையைக் கொண்டிருப்பதன் மூலம் இன்டிகா ஹேர் கலரின் முகமாக, நல்லெண்ணத் தூதர்களாக இருப்பதற்கான சரியான தேர்வாக நடிகர் அக்‌ஷய்குமார் மற்றும் இலியானா டி’க்ரூஸ் இருக்கின்றனர்,” என்று கூறினார்.

இன்டிகா பிராண்டு உடனான தனது உறவு குறித்து கருத்து தெரிவித்த நடிகர் அக்‌ஷய் குமார், “கவின்கேர் குழுமத்தின் ஒரு அங்கமான இன்டிகா ஹேர் கலருக்கான பிராண்டு தூதராக இணைந்து செயல்படுவதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். புத்தாக்கம் என்ற கருத்தாக்கத்தையே மறுவரையறை செய்த பெருமை இந்த பிராண்டுக்கு உரியது. 10 நிமிடங்களில் ஹேர் கலரிங் செய்வதை சாத்தியமாக்கியிருக்கின்ற இன்டிகா குடும்பத்தின் ஒரு அங்கமாக இருப்பது அற்புதமான உணர்வை எனக்குத் தருகிறது. இந்த பிராண்டுடன் நானும், நடிகை இலியானாவும் இணைந்திருக்கின்ற இந்நிலையில், இத்தயாரிப்பின் சிறப்பான அம்சங்கள் மற்றும் அதன் பயன்பாடு குறித்து நாடெங்கிலும் மக்கள் அறியுமாறு செய்வதன் மூலம் இந்த பிராண்டை இன்னும் பிரபலமாக்க நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவோம்,” என்று கூறினார்.

இந்த பிராண்டின் தூதராக தனது பிணைப்பு குறித்து பேசிய நடிகை இலியானா டி’க்ரூஸ், “கவின்கேர் குழுமத்துடனும் மற்றும் இன்டிகா ஹேர் கலர் பிராண்டுடனும் இணைந்து செயல்படுவது எனக்கு பெருமகிழ்ச்சி தருகிறது. ஹேர் கலர்களில் எண்ணற்ற பல வகைகளை இன்டிகாவின் அணிவரிசை கொண்டிருக்கிறது. ஒரு கிண்ணம் அல்லது பிரஷ்க்கான அவசியம் இல்லாமல், வெறும் 10 நிமிடங்களில் நாமே ஹேர் கலரிங் செய்ய முடியுமென்பது இன்டிகா தயாரிப்புகளின் நிகரற்ற சிறப்பம்சமாகும். இந்த ஒத்துழைப்பு உறவின் மூலம், இளமையாக உணரவைக்கும் இன்டிகாவின் நல்ல செய்தியை பரப்புவதன் வழியாக இந்தியாவெங்கிலும் அனைத்து வாடிக்கையாளர்களையும் சென்றடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். வாழ்க்கையில் நம்பிக்கையோடு தொடர்ந்து முன்னேறிச் செல்ல அவர்களுக்கு சரியான நம்பிக்கையினை இன்டிகா வழங்குகிறது என்ற செய்தியினை நாங்கள் எடுத்துரைப்போம்,” என்று கூறினார்.

Faceinews.com