தமிழ் திரையுலகம் வண்ணமயமான நினைவுகளை உருவாக்கிய ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் 20 ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பன்முகப்பட்ட திரையுலகங்களில் 20 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். இவர் பன்முகதிறமையாளர், ஒரு சிறந்த இயக்குனர், ரசனையான ஒளிப்பதிவாளர், திரைப்பட தயாரிப்பாளர், மற்றும் எழுத்தாளர் என பல்வேறு திறமைகளுக்கு சொந்தக்காரர்.
மணி ரத்னம், சஞ்சய் லீலா பன்சாலி, ராஜ்குமார் ஹிரானி, அனுராக் பாசு, இம்தியாஸ் அலி, பிரியதர்ஷன், ஷங்கர், கௌதம் மேனன், பிரபு தேவா, கே எஸ் ரவிக்குமார், பிரசாந்த் நீல் தேஜா, சுஷி கணேசன், டுவேன் அட்லர், ரேவதி, ராஜீவ் குமார், ஜெயராஜ், ரஃபி மெக்கார்டின், சஜி கலியாஷ் மற்றும் பல சிறந்த இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றியது அவரது திறமை மற்றும் விளக்கக்காட்சிக்கு சான்றாக விளங்குகிறது.
இந்த 20 ஆண்டுகால திரையுலக வாழ்வில் சிறப்பான 32 க்கும் மேற்பட்ட இயக்குனர்களுடனும், 35+ பிற படங்களிலும், 400 விளம்பரப்படங்களிலும் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
ஆஸ்கர் பிலிம்ஸ் வி ரவிச்சந்திரன் தயாரித்த ‘மாஸ்கோவின் காவேரி’ (2010) மூலம் அவர் தன்னை ஒரு எழுத்தாளர் – இயக்குனராகவும் அடையாளம் காட்டினார். இப்படத்தின் மூலமாக தான் நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது திறமைகளுக்கு 23 வது ஈஎம்ஈ சர்வதேச விருது, மாநில விருதுகள், பிலிம் ஃபேர் விருதுகள், ஐஃபா விருதுகள், ஸ்க்ரீன் விருதுகள் மற்றும் பல அங்கீகாரங்கள் சான்றாக இருக்கின்றன.