துல்கர் படத்தில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தது ஏன்?: இயக்குநர் விளக்கம்

IMG-20200727-WA0033

Faceinews Logo - Copy

துல்கர் படத்தில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தது ஏன்?: இயக்குநர் விளக்கம்
வரனே அவஷ்யமுண்டு படத்தில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்ததற்கான காரணத்தை இயக்குநர் அனுப் சத்யன் தெரிவித்துள்ளார். அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் தயாரித்து நடித்த வரனே அவஷ்யமுண்டு படம் கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

IMG-20200727-WA0034

அந்த படத்தில் சுரேஷ் கோபியின் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து காமெடி செய்தது தமிழர்களை கோபம் அடையச் செய்தது. இதையடுத்து துல்கர் சல்மான் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்த பிரபாகரன் சர்ச்சை குறித்து அனுப் சத்யன் கூறியதாவது, வரனே அவஷ்யமுண்டு அரசியல் படம் அல்ல. அந்த வசனம் வேலுப்பிள்ளை பிரபாகரனை குறிக்கவில்லை. நான் இலங்கைக்கு சென்றுள்ளதால் பிரபாகரன் பற்றி எனக்கு தெரியும். போரால் பாதிக்கப்பட்ட ஜாஃப்னா, கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கு நான் கடந்த ஆண்டு சென்று அங்குள்ள மக்களிடம் பேசினேன். எனக்கு பிரபாகரன் பற்றி தெரியும்.

IMG-20200727-WA0035

அதனால் தான் இல்லாத விஷயத்தை சொல்லி நெகட்டிவிட்டியை மக்கள் பரப்புவதை பார்த்து கஷ்டமாக இருக்கிறது. எனக்கு ஒரு நடுத்தர வயது மலையாளி பெயர் தேவைப்பட்டது. அப்பொழுது தான் பட்டனபிரவேஷத்தில் பயன்படுத்தப்பட்ட பிரபாகரன்பெயர் நினைவுக்கு வந்தது.

வெளிநாட்டு பெயர் இல்லாமல் நடுத்தர வயது மலையாளியின் பெயரை நாய்க்கு வைத்து அந்த கதாபாத்திரம் அழைத்தது யாரையும் பாதிக்காத நகைச்சுவை ஆகும் என்றார்.

Faceinews.com