கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் பங்கேற்கும்
‘சிந்தனைகள் சிம்ப்ளிபைடு வித் குருதேவ்’
ஆன்மீக கலந்துரையாடல் நிகழ்ச்சி
செப்டம்பர் 20-ந்தேதி காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது
சென்னை, செப். 15-
வரும் செப்டம்பர் 20-ந்தேதி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘சிந்தனைகள் சிம்ப்ளிபைடு வித் குருதேவ்’ என்னும் நிகழ்ச்சியில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் பங்கேற்க உள்ளார். இந்நிகழ்ச்சி அன்று காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. ‘உங்கள் மனதை வெல்ல முடிந்தால், நீங்கள் உலகத்தை வெல்ல முடியும்’ என்னும் தனது கற்றலை குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி இந்நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்கிறார். ஆன்மீகம் பற்றிய இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி உலகளாவிய பார்வையாளர்களை கவர்ந்திழுக்கத் தயாராக உள்ளது. அன்றைய நிகழ்ச்சியில் சரத்குமாருடன், குருதேவ் தனது ஆன்மீக அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியை நீங்கள் பார்க்க உங்களுக்கான 3 காரணங்களை நாங்கள் சொல்லவிரும்புகிறோம்.
உள்ளார்ந்த ஆன்மீகத்திற்கான பயிற்சி
உள்ளார்ந்த அமைதியையும் மகிழ்ச்சியையும் தேடும் எவருக்கும், இந்த நிகழ்ச்சி ஒரு தங்கச் சுரங்கம் போல இருக்கும் என்று உறுதியளிக்கிறது, ஏனெனில் குருதேவ் சரத்குமாரிடம் உள்ளம் சார்ந்த ஆன்மீகத்தைப் பற்றிய ஒரு உரையாடலில் ஈடுபடுவிருக்கிறார். கடவுள் மீது நம்பிக்கை மற்றும் நம்பிக்கை இல்லாதது பற்றிய சரத்குமாரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் குருதேவ் அனைவருக்கும் ஆன்மீகத்தின் நோக்கத்தை அழகாக எடுத்துரைக்க உள்ளார். கடவுளை நம்பாத தனது தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் மற்றும் நம்பிக்கை பற்றிய தனது அனுபவங்களை சரத்குமார் பகிர்ந்துகொள்ள உள்ளார்.
நேர்மறை எண்ணங்கள் மற்றும் வழிபாட்டுத் தலம்:
குருதேவ் மற்றும் சரத்குமாருக்கும் இடையிலான உரையாடலானது ஒரு சுவாரஸ்யமான கோணத்தில் செல்கிறது. ஏனெனில் அவர்கள் ஆன்மீகத்தின் நுணுக்கமான விஷயங்களை பேசுகிறார்கள். வழிபாட்டு தலங்கள் பற்றியும் நேர்மறையான எண்ணங்கள் பற்றியும் குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பகிர்ந்து கொள்கிறார்.
ஆத்மா பயணம் சாத்தியமா:
உரையாடல் ஆன்மீக தொடர்பாக சென்று கொண்டிருக்கும்போது, சரத்குமார் சர்ச்சைக்குரிய அஸ்ட்ரல் டிராவல் என்னும் ஆத்மா பயணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயங்கள் பற்றி பேசுகிறார். குருதேவ் அஸ்ட்ரல் டிராவலின் பின்னால் உள்ள விஞ்ஞான ரீதியான பகுத்தறிவையும், நம்முடைய ஆன்மா உண்மையில் பல்வேறு பரிமாணங்களில் எவ்வாறு பயணிக்கிறது என்பதைப் பற்றியும் தெளிவாக விளக்குகிறார்.
உரையாடல் சுவாரஸ்யமான விஷயங்களை எடுத்து கூறுவதோடு, மனித வாழ்க்கைக்கு முக்கியமான அறிவு சார்ந்த விஷயங்களை குருதேவ் நகைச்சுவையோடு எடுத்துக்கூறுகிறார். இந்த நிகழ்ச்சி வரும் 20-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.