உலக சாதனை படைத்த மோதிரம் இணையத்தில் ஏலம்

The Divine - 7801 Brahma Vajra Kamalam

Faceinews Logo - Copy

உலக சாதனை படைத்த மோதிரம் இணையத்தில் ஏலம்

 

 

 

நவம்பர் 13 முதல் நவம்பர் 22 வரை ஆன்லைனில் ஏலம் விடப்படுகிறது

 

சென்னை, 02 நவம்பர் 2020: ஹைதராபாத்தை சேர்ந்த சந்துபாய் (ஹால்மார்க் ஜூவல்லர்ஸ் ஒரு பிரிவு) தி டயமண்ட் ஸ்டோரின் உரிமையாளர் கோட்டி ஸ்ரீகாந்த், கடந்த செப்டம்பர் மாதம் ஒரே மோதிரத்தில் அமைக்கப்பட்ட பெரும்பாலான வைரங்களுக்கான புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்திருந்தார். கின்னஸ் சாதனை புரிந்த 7,801 இயற்கை வைரங்களைக் கொண்ட மோதிரம் வரும் நவம்பர் 13 முதல் நவம்பர் 22 வரை ஆன்லைனில் ஏலத்தில் விடப்படவுள்ளது. ஏலத்திற்கான பதிவுகள் 2020ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி முதல் துவங்குகிறது. இந்த ஏலத்தின் ஆரம்ப விலை ரூபாய் 78,01,000 (104,692 அமெரிக்க டாலர்) என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

கின்னஸ் சாதனை மோதிரத்தை உருவாக்கிய திரு கோட்டி ஸ்ரீகாந்த் கூறுகையில், நகைகளில் தனித்துவமான கலை படைப்புகளை உருவாக்குவதற்கான எனது ஆர்வத்தை அங்கீகரித்த கின்னஸ் உலக சாதனை நிறுவனத்திற்க்கு என் மரியாதை கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியை நகை ஆர்வலர்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்வதற்காக இந்த தலை சிறந்த டிவைன் – 7801 பிரம்ம வஜ்ர கமலம் மோதிரத்தை ஏலம் விடுவதில் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறினார்.

 

 

 

ஏல முறை:

 

 

 

www.thedivine7801.com என்ற இணையதளத்தில் பதிவுகள் பெறப்படுகின்றன. பதிவு செய்துள்ள ஏலதாரருக்கு, ஏலத்தில் பங்கு பெறுவதற்கான இணைப்பு, பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் அனுப்பப்படும். பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் பெற்ற அனைத்து ஏலதாரர்களும் ஆன்லைன் ஏலத்தில் நிகழ் நேரத்தில் பங்கேற்க்கலாம்.

 

 

 

தி டிவைன் – 7801 பிரம்ம வஜ்ர கமலம் – குறித்து

 

 

 

மருத்துவ குணங்கள் உடைய மற்றும் மிகவும் புனிதமாகக் கருதப்படும் அரிய மலரான பிரம்ம கமலத்தின் பெயர் இந்த மோதிரத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. வைரம் சமஸ்கிருதத்திலும், தெலுங்கிலும் வஜ்ரா என்று அழைக்கப்படுகிறது. மிகவும் இயற்கையான மற்றும் தூய்மையான வடிவத்தில் வழிபாட்டுக்கான பொதுவான பொருளாக அமைந்ததால் இந்த மலரின் பெயர் மோதிரத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த மோதிரம் செப்டம்பர் 2018 இல் கருத்துருவாக்கம் செய்யப்பட்டது, மேலும் அர்ப்பணிப்புடன் கூடிய கலை முயற்சி மற்றும் கைவினைத்திறன் காரணமாக அதன் நிறைவுக்கு சுமார் 11 மாதங்கள் எடுத்தது. இது எட்டு இதழ்களைக் கொண்ட ஆறு அடுக்குகளைக் கொண்டுள்ளது மற்றும் மேல் அடுக்கில் ஆறு இதழ்கள் மூன்று மகரந்தங்களைக் கொண்டுள்ளன.

Faceinews.com