சென்னையில் ஜே.எஸ்.எல் லைஃப்ஸ்டைல் லிமிடெட் நிறுவனத்தின், ஆர்ட்டினாக்ஸ் புதிய கடை திறப்பு விழா
நடிகர் ஜீவா திறந்து வைத்தார்.
சென்னை, டிசம்பர் 2020: இந்தியாவின் முன்னணி வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனமான ஜே.எஸ்.எல் லைஃப்ஸ்டைல் லிமிடெட் நிறுவனத்தின், ஆர்ட்டினாக்ஸ் புதிய கடை திறப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. புதிய கடை திறப்பு விழாவில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் திரு ஆர்.பி.சவுத்ரி மற்றும் புகழ்பெற்ற நடிகர் திரு ஜீவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு கடையை திறந்து வைத்தனர்.
புதிய கடை திறப்பு குறித்து பேசிய ஜே.எஸ்.எல் லைஃப்ஸ்டைல் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மந்தீப் சிங் கூறுகையில், ஜே.எஸ்.எல்.எல் அதன் சிறந்த பிராண்டான ஆர்ட்டினாக்ஸ் கிளையை சென்னையில் திறப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறது. மாநிலத்தின் முக்கிய பகுதியாக சென்னை விளங்குவதால் எங்கள் நிறுவனம் இங்கு வெற்றிகரமாக செயல்படும் என்று உறுதியாக நம்புகிறோம். திரு. ரோஹித் காடியா மற்றும் திரு கவுதம் ஜெயின் ஆகியோருடன் வியாபார கூட்டமைப்பததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த வாய்ப்பைக் கொண்டு, நகரத்தில் உள்ள பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக பல வகையான வடிவமைப்புகளில் எங்கள் பொருட்களை இங்கு அமைக்கவுள்ளோம், மேலும் மிகச் சிறந்த கலைத்திறன் உடைய பொருட்களை வழங்குவதன் மூலம் எங்கள் நிறுவனத்திற்கு மேலும் நற்பெயரை உருவாக்க முனைகிறோம் என்று கூறினார்.
ஜே.எஸ்.எல் லைஃப்ஸ்டைல் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், திருமதி தீபிகா ஜிண்டால் கூறுகையில், ஒவ்வொருவரின் வீடும் கலைதிறனுடன் அமையவேண்டும் என்ற தேடல் உடைய நாங்கள், கண்ணாடி, மரம் மற்றும் பீங்கான் போன்ற பொருட்களுடன் துருப்பிடிக்காத எஃகு மூலம் புதுமையான கலைதிறன் வாய்ந்த படைப்புகளை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வருகிறோம். மேலும் வீட்டு உபயோக பொருட்கள் துறையில் பரந்த அளவிலான சமையலறைகள், வேனிட்டி மற்றும் அலமாரி தீர்வுகளை தருவதன் மூலம் எங்கள் நிறுவனம் சர்வதேச பாணிகளையும் வடிவமைப்புகளையும் உங்கள் வீட்டு வாசலுக்கு கொண்டு வருகிறது என்று கூறினார்.
ஜே.எஸ்.எல் லைஃப்ஸ்டைல் லிமிடெட் நிறுவனத்தின் வணிகத் தலைவர் திரு. ராஜீவ் கபூர் கூறுகையில், சென்னை மிக முக்கியமான நகராகவும் மிகப்பெரிய சந்தையாக இருப்பதாலும் எங்கள் நிறுவன விரிவாக்கத்தின் முக்கிய மைல் கல்லாக இந்த கடை திறப்பு அமைகிறது. நாடு முழுவதும் அடுத்த ஆண்டுக்குள் மேலும் 20 கிளைகளை அமைத்து இந்த துறையில் தன்னிகரற்ற நிறுவனமாக விளங்க எங்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.
திறப்பு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கிளையின் உரிமையாளர்கள் திரு ரோஹித் காடியா மற்றும் திரு கவுதம் ஜெயின் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.