Prime Original Pvt. Ltd .வழங்கும் Legacy of Lies தமிழில் -ஏஜெண்ட் M 16
திரைக்கதை ஆசிரியர் மற்றும் பட தயாரிப்பாளரான Scott Adkins அடிப்படையிலே ஒரு சண்டை கலை நிபுணர்! பல ஹாலிவுட் படங்களில் சண்டை காட்சிகளில் வியக்கவைக்கும் விதத்தில் அதிரடி சாகசங்கள் புரிந்த கதாநாயகனாக நடித்து கலக்கியிருக்கும் ஒரு action படமிது!
பிரபல action -hero வான Jean Claude Van Damme ஐ முன்மாதிரியாக கருதும் இவர், Van Damme உடன் இணைந்து 4 படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!
Bangalore ஐ சேர்ந்த Prime Original நிறுவனம், பல Hollywood திரைப்படங்களை தருவித்து இந்தியா முழுவதிலும் விநியோகம் செய்யும் முயற்சியில் ஈடுபட, திரைப்பட விநியோகத்துறையில் 50 வருட கால அனுபவம் உள்ள Hansa Pictures நிறுவனம், இப்படத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிடுகிறது!
Hansa Pictures ஆங்கில மற்றும் மாநில மொழி படங்களை வெளியிடுவதில் பழுத்த அனுபவம் கொண்ட ஒரு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது!
முன்னாள் M 16 ஏஜெண்ட், Martin Baxter ( Scott Adkins) சில காரணங்களுக்காக வெளியுலகில் பார்வையிலிருந்து விலகி தன மகளோடு இடம் விட்டு இடம் பெயர்ந்து நாடோடி வாழ்க்கை நடத்திவருகிறார்.
தன் மகள், Lisa Baxter (Honor Kneafsey) வை கண்ணின் மணி போன்று காத்து வருகிறார்.
Martin , ஒரு நாள், ரஷ்ய உளவுத்துறையின் சில நடவடிக்கைகளை பற்றி ஆய்வு செய்யும் பத்திரிகையாளரான Sacha Stepanenko (Yuliia Sobol ) என்கிற ஒரு பெண்ணை சந்திக்கிறார்!
அந்த சந்திப்பு, அவரது வாழ்க்கையை திசை திருப்பி போட்டு விடும் என்பது அப்போது அவருக்கு தெரியாது!
இதற்கிடையில் Lisa கடத்தப்படுகிறார்! கடத்தலுக்கும் உளவுதுறைக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருப்பது தெரியவருகிறது!
தனிமையான தன் வாழ்க்கையிலிருந்து பொது வாழ்க்கைக்கு திரும்பவேண்டிய கட்டாயம் Martin க்கு!
பிறகென்ன, action கலந்த அதிரடிதான்!
இயக்கம் – Adrian Bol
இசை – Arkadiusz Reikowski
ஒளிப்பதிவு – Simon Rowling
ஆங்கிலத்திலும் தமிழிலும் -Hansa Pictures வெளியீடு