ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் கட்டப்பா போன்ற ஒரு நண்பன் தேவை – நடிகை தமன்னா

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் கட்டப்பா போன்ற ஒரு நண்பன் தேவை – நடிகை தமன்னா

Faceinews Logo - Copy

 

 

● ஹெல்த்கேர் நிறுவனமான பிரிஸ்டின் கேரின் பர்சனல் கேர் பட்டி சேவை குறித்த காணொலியில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ்.

 

 

 

● பிரிஸ்டின் கேரில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு “பர்சனல் கேர் பட்டி ” என்னும் சேவையை அறிமுகப்படுத்த தயாரிக்கப்பட்டுள்ள இந்த காணொலி ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு கட்டப்பா போன்ற ஒரு நண்பன் தேவை என்னும் கருத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது..

 

 

 

சென்னை, ஜூலை 2021: ஹெல்த்கேர் நிறுவனமான பிரிஸ்டின் கேரின் இலவச நோயாளி பராமரிப்பு சேவையான பர்சனல் கேர் பட்டி. குறித்து நடிகர் சத்யராஜ் பேசியுள்ள காணொலியை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நடிகை தமன்னா ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் கட்டப்பா போன்ற ஒரு நண்பன் தேவை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

 

 

பாகுபலி படத்தில் நடிகர் சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் மகிழ்மதி இராஜ்ஜியத்தின் மீது அவருக்கு இருந்த விசுவாசம், வீரம் ஆகியவற்றிற்காக பெரிதும் பேசப்பட்டது, அத்தகைய கதாபாத்திரத்தை பிரிஸ்டின் கேரின் ‘பெர்சனல் கேர் பட்டி’ உடன் ஒப்பிட்டு நடிகர் சத்யராஜ் பேசுவது போல இந்த காணொலி தயாரிக்கப்பட்டுள்ளது.

 

 

 

மருத்துவர் ஆலோசனை, காப்பீட்டு ஒப்புதல் முதல் மருத்துவமனை சேர்க்கை மற்றும் அறுவை சிகிச்சை போன்ற பலதரப்பட்ட சேவைகளை இந்த பர்சனல் கேர் பட்டி திட்டம் ஒரு நண்பனை போல நோயாளிகளுக்கு உதவுகிறது. காணொலியின் முடிவில் நடிகர் சத்யராஜ் “’அறுவை சிகிச்சை என்றாலே பிரிஸ்டின் கேர்” என்று கூறி முடிக்கிறார்.

 

 

 

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த காணொலி குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்குவதற்காக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், ட்விட்டர், ஷேர்சாட் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் இன்று வெளியிடப்பட்டது.

 

 

 

இந்த காணொலியில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட நடிகர் சத்யராஜ் கூறுகையில், பிரிஸ்டின் கேர் குழுவுடன் இணைந்து இந்த காணொலியில் பங்கேற்றது மிகவும் சுவாரசியமாக இருந்தது. இந்த காணொலி, கட்டப்பாவின் கதாபாத்திரம் பல ஆண்டுகளாக மக்களிடம் பெற்றுள்ள அன்பை மீண்டும் எனக்கு நினைவூட்டுவதாக இருந்தது. பர்சனல் கேர் பட்டி திட்டம் என்பது ஒவ்வொரு நோயாளியின் அறுவை சிகிச்சைக்காகவும் கட்டப்பா போன்ற ஒரு நண்பனை பிரிஸ்டின் கேர் நிறுவனம் நியமிப்பதை குறிப்பிடுகிறது, இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதனால்தான் அவர்கள் ‘அறுவை சிகிச்சை என்றாலே பிரிஸ்டின் கேர்’ என்று கூறுகிறார்கள் என்று கூறினார்.

 

 

 

பிரிஸ்டின் கேர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஹர்சிமர்பீர் (ஹர்ஷ்) சிங் கூறுகையில், “அறுவை சிகிச்சை செயல்முறைகளைப் கண்டுபிடிப்பதும், புரிந்துகொள்வதும் பலருக்கும் சோர்வளிக்க கூடியதாக உள்ளது. பிரிஸ்டின் கேர் பாராமரிப்பில், நாங்கள் நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் படும் சிரமங்களை நன்கு உணர்ந்துள்ளோம், இதன் காரணமாகவே பர்சனல் கேர் பட்டி திட்டம் மூலம் நோயாளிகளின் பராமரிப்புக்கு முன்னுரிமை அளிப்பதை உறுதிசெய்துள்ளோம். ஒவ்வொரு கட்டத்திலும் மிகவும் அன்பான முறையில் கவனிப்பையும் உதவிகளையும் வழங்குவதன் மூலம் தடையற்ற அறுவை சிகிச்சை அனுபவத்தை முன்னிலைப்படுத்த நாங்கள் இலக்கு வைத்துள்ளோம் என்று கூறினார்.

 

 

 

பிரிஸ்டின் கேர் – சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூர், கொச்சி, மைசூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட இந்தியாவின் 30 க்கும் மேற்பட்ட நகரங்களில் பைல்ஸ், ஹெர்னியா, கண்புரை போன்ற 50க்கும் மேற்பட்ட நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு முன்னணி சுகாதார நிறுவனம் ஆகும். 100க்கும் மேற்பட்ட கிளினிக்குகள், 300க்கும் மேற்பட்ட அனுபவமுள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட கூட்டு மருத்துவமனைகளு இணைந்து செயல்படும் பிரிஸ்டின் கேர் நிறுவனம் நோயாளிகளின் சிகிச்சைகளில் உள்ள சிரமங்களை சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் இந்நிறுவனம் சமீபத்திய மருத்துவ தொழில்நுட்பத்துடன் ஒரு முழுமையான சுகாதார சேவைகளை நோயாளிகளுக்கு வழங்குவதன் மூலம் இந்தியா முழுவதும் பிரதிபலிக்கும் ஒரு மாதிரியை உருவாக்க முனைந்துள்ளது.

 

 

https://www.instagram.com/p/CRqIbbBDyzU/?utm_medium=share_sheet

 

https://fb.watch/6W5H9PjbDm/

 

Faceinews.com