மெக்டொனால்ட்ஸ் இந்தியா (மேற்கு மற்றும் தெற்கு) பிரபல திரைப்பட நட்சத்திரம் ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து அறிமுகம் செய்யும் ‘தி ராஷ்மிகா மீல்’
உலகளவில் 50 க்கும் மேற்பட்ட சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட BTS மீல் முதல் அமெரிக்காவில் சமீபத்திய மரியா கேரி மீல் வரை, ஃபேமஸ் ஆர்டர்ஸ் மீல் அம்சம், இப்போது ‘தி ராஷ்மிகா மீல்’ மூலம் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது
சென்னை, 18 நவம்பர் 2021: நவம்பர் 19 ஆம் தேதி மெக்டொனால்டில் ராஷ்மிகா மந்தனாவின் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்து கிடைக்கவுள்ளது. மெக்டொனால்ட்ஸ் இந்தியா (தெற்கு மற்றும் மேற்கு) சூப்பர் ஸ்டார் ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து ரசிகர்களை மகிழ்விப்பதற்காக ‘தி ராஷ்மிகா மீல்’ என்ற சிறப்பு உணவைத் உருவாக்கியுள்ளது. இந்த உணவில் ராஷ்மிகாவிற்கு விருப்பமான – McSpicy Fried Chicken, McSpicy Chicken Burger, Piri Piri Fries, Nimbu Fizz மற்றும் McFlurry ஆகியவை ஒரு பிரத்யேக பேக்கேஜிங்கில் கிடைக்கும்.
நம் அனைவரையும் போலவே, ராஷ்மிகாவும் தனது மெக்டொனால்டு உணவை ருசிப்பதில் தனக்கென தனித்துவமான ஒரு வழியைக் கொண்டுள்ளார். இப்போது, ‘தி ராஷ்மிகா மீல்’ மூலம் அவரது ரசிகர்களும் அதை அவரது வழியில் உண்டு மகிழலாம். அவர் முதலில் McSpicy Fried Chickenஐ கடிப்பார். பின்னர் McSpicy சிக்கன் பர்கரின் உள்ளே Piri Piri ஃபிரைஸ்களை வைத்து, அதை காரமாகச் சுவைப்பார். பின்னர் புத்துணர்ச்சியூட்டும் Nimbu Fizzஸை ஒரு மடக்கு அருந்துவார் இறுதியாக கிரீமி மெக்ஃப்ளூரியை சுவைத்துச் சாப்பிட்டு, தனது உணவை இனிமையாக முடிப்பார். ராஷ்மிகா தனது உணவை தனித்துவமான முறையில் ரசித்துக் காட்டுவதை வெளிப்படுத்தும் வகையில் McDonald’s India ஒரு TVC ஐ வெளியிட்டுள்ளது.
தி ராஷ்மிகா மீல் வெளியீட்டு விழாவில், மெக்டொனால்ட்ஸ் இந்தியா (மேற்கு மற்றும் தெற்கு) மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் இயக்குநர் அரவிந்த் RP அவர்கள், “மிகப் பிரபலமான பிரபலங்கள் உட்பட அனைவரும் மெக்டொனால்டில் ஆர்டர் செய்கிறார்கள். ராஷ்மிகாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், அவரது மில்லியன் கணக்கான ரசிகர்களுக்கு ‘தி ராஷ்மிகா மீல்’ வழங்குவதற்கும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் அவர் ரசிக்கும் அதே விதத்தில் அவரது ரசிகர்கள் சுவைத்து மகிழ்வதைக் காண நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்”
இந்த தனித்துவமான கூட்டாண்மை பற்றி ராஷ்மிகா மந்தனா அவர்கள், “எனக்கு நினைவு தெரிந்து, மெக்டொனால்டு உணவுகளோ எனது கம்ஃபர்ட் உணவாக இருந்து வருகின்றன. நான் அந்த பிராண்டுடன் வளர்ந்தேன் என்றால் அது மிகையல்ல நான் எப்போதும் McSpicy சிக்கன் பர்கர் மற்றும் அதன் உள்ளே வைக்கப்படும் Piri Piri ஃபிரைஸ்களை மிகவும் விரும்புவேன். McFlurry வாழ்க்கையின் அனைத்து பெரிய மற்றும் சிறிய வெற்றிகளையும் கொண்டாடும் வழியாக உள்ளது. எனது மெக்டொனால்டின் விருப்பமானவற்றை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.
தி ராஷ்மிகா மீல் | மெக்டொனால்ட்ஸ் இந்தியா – யூடியூப்
இந்தப்பிரபலமான ஆர்டர்கள் தளம் மெக்டொனால்டில் உலகளாவிய வெற்றியைக் கண்டது. அமெரிக்காவில் உள்ள Mariah Carey Meal முதல், BTS Meal வரை உலகளவில் 50 க்கும் மேற்பட்ட சந்தைகளில் அவை வெளியிடப்பட்டன, இந்த ஃபேமஸ் ஆர்டர் மீல் அம்சம் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. McDonald’s India இந்தியாவின் தெற்கு சந்தைகளில் ராஷ்மிகா மீல் இதன் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மெக்டொனால்டு உணவகங்களிலும் ‘தி ராஷ்மிகா மீல்’ கிடைக்கும். வாடிக்கையாளர்கள் காண்டாக்ட்லெஸ் டெலிவரி, காண்டாக்ட்லெஸ் டேக்அவுட், ஆன் தி கோ அல்லது மெக்டொனால்டில் உணவருந்துவதன் மூலம் இந்த உணவை ஆர்டர் செய்யலாம். இந்த உணவு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.