இந்தியப் பொருளாதாரம் மற்றும் சமுதாயத்திற்கு ரெக்கிட் தரும் ஆதரவை ஆக்ஸ்போர்டு பொருளாதாரம் சிறப்பித்துக் காட்டுகிறது

இந்தியப் பொருளாதாரம் மற்றும் சமுதாயத்திற்கு ரெக்கிட் தரும் ஆதரவை ஆக்ஸ்போர்டு பொருளாதாரம் சிறப்பித்துக் காட்டுகிறது

ஆக்ஸ்ஃபோர்டு எகனாமிக்ஸின் ஒரு புதிய, சுதந்திரமான அறிக்கை கூறுகிறது : :

• 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ரெக்கிட் ரூபாய் 78.8 பில்லியன் (£775 மில்லியன்) பங்களித்துள்ளது

• ரெக்கிட் ஊழியர்கள் பொதுவாக இந்தியாவின் பொருளாதாரத்திற்கு தேசிய சராசரியை விட 6 மடங்கு பங்களிப்பை வழங்குகிறார்கள்

• 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் முழுவதிலும், 69,000 க்கும் மேற்பட்ட வேலைகளை ரெக்கிட் ஆதரித்துள்ளது.

நேஷனல், 08 ஆகஸ்ட் 2022 – ரெக்கிட்டின் முதல் மூன்று சந்தைகளில் ஒன்றான இந்தியாவில், ரெக்கிட் பென்கிஸர் குரூப் plc (“ரெக்கிட்”) இன் குறிப்பிடத்தக்க பொருளாதார தாக்கம் குறித்த அதன் சுதந்திரமான பகுப்பாய்வை ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் இன்று வெளியிட்டது. உடல்நலம், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தயாரிப்புகளில் உலகளாவிய முன்னணியில் உள்ள ரெக்கிட், 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) மொத்தம் ரூபாய் 78.8 பில்லியன் (£775 மில்லியன்) பங்களித்தது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), வேலைவாய்ப்பு மற்றும் 2021 இல் அரசாங்கம் பெற்ற வருவாய் ஆகிய மூன்று முக்கிய தாக்கங்களை இணைத்து, இந்திய பொருளாதாரம் மற்றும் சமுதாயத்திற்கு ரெக்கிட் கொண்டு வரும் மதிப்பை அறிக்கை மதிப்பிடுகிறது:

அறிக்கையின் மற்ற சிறப்பம்சங்களில் உள்ளடங்குபவை:

• உயர் GDP மல்டிப்ளையர் – ரெக்கிட், GDP மல்டிபிளையர் 2.5 ஐக் கொண்டுள்ளது, இது இந்தியாவில் உள்ள இரசாயன மற்றும் மருந்து உற்பத்தி செய்யும் சராசரி நிறுவனத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும். அதாவது 2021 ஆம் ஆண்டில் GDPயில் ரெக்கிட்டால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு ரூ. 1 மில்லியனுக்கும், அதனுடைய உள்ளீடுகள் மற்றும் ஊதியங்களுக்கான அதன் செலவு உள்ளூர் பொருளாதாரத்தில் ரூ.1.5 மில்லியனைத் தூண்டியது.

• ஆதரவு வழங்கல் சங்கிலி – ரெக்கிட்டின் உள்ளூர் கொள்முதலில் 95%, இந்தியாவில் உள்ள சப்ளையர்களிடம் இருந்து பெறப்பட்டது.

• வேலைவாய்பை உருவாக்குபவர் – இந்தியாவில் ரெக்கிட்டின் வேலைவாய்ப்பு பெருக்கம் 21 ஆகும், இது தேசிய சராசரியை விட கிட்டத்தட்ட 6 மடங்கு அதிகம்.

“ரெக்கிட் போன்ற ஒரு பெரிய மற்றும் வெற்றிகரமான உலகளாவிய நிறுவனம் இந்தியப் பொருளாதாரம், வேலை வாய்ப்புகளை ஆதரித்தல், பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் நாடு முழுவதும் சமூக வளர்ச்சியை முன்னேற்றுதல் ஆகியவற்றில் செய்யக்கூடிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை எங்கள் ஆராய்ச்சி நிரூபிக்கிறது,” என்று ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி அட்ரியன் கூப்பர் கூறினார். “ரெக்கிட் உள்ளூர் மக்களிடையே மிக உயர்ந்த தரமான சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கான சமூக அணுகலை மேம்படுத்துவதில் முதலீடு செய்துள்ளது.”

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (ஆர்&டி) முயற்சிகள், அதன் பணியாளர்களை மேம்படுத்துதல் மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் மற்றும் உள்ளூர் சமூகங்கள் ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான வாழ்க்கையை நடத்துவதற்கு ஆதரவளிப்பதை, இந்தியாவில் பரந்த சமூக மேம்பாட்டிற்கு ரெக்கிட்டின் பங்களிப்பை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

ரெக்கிட்டின் தலைமை நிர்வாக அதிகாரி லக்ஷ்மன் நரசிம்மன் கருத்துத் தெரிக்கையில். “இந்தியாவில் உள்ள எங்களின் வலுவான வேர்கள் மற்றும் இங்கே நிருவியுள்ள உலகின் முன்னணி R&D மற்றும் IT வசதிகளைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் வணிகத்திற்கான திறமைக்கு இந்தியா சிறந்த ஆதாரமாக இருப்பது மற்றும் உள்ளூர் விநியோகச் சங்கிலி எங்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். அரசாங்கத்தின் ‘மேக் இன் இந்தியா’ பிரச்சாரத்திற்கு ஏற்ப, ரெக்கிட்டின் உள்ளூர் கொள்முதலில் 95% இந்திய சப்ளையர்களிடம் இருந்து பெறப்படுகிறது.”

ரெக்கிட்டின் தெற்காசியாவின் SVP கௌரவ் ஜெயின் கருத்துத் தெரிவிக்கையில்: “1934 முதல் இந்திய குடும்பங்களின் அங்கமாக உள்ள நாங்கள், இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு முன்னதாக இந்த அறிக்கையை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். ஆக்ஸ்போர்டின் சுதந்திரமான மதிப்பீடு இந்த வலுவான பாரம்பரியத்தை கட்டியெழுப்புவதற்கான எங்களுடைய அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வரும் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் மற்றும் சமூக சவால்களைத் தீர்ப்பதற்கு ஆதரவளிக்க நாங்கள் காத்திருக்கிறோம்.”

ரெக்கிட், இந்திய அரசு, அரசு சாரா நிறுவனங்கள் (NGOக்கள்), தொழில் சங்கங்கள் மற்றும் பிற அமைப்புகளுடன் சமூக சவால்களைச் சமாளிக்க கூட்டு சேர்கிறது. இந்தியாவில் அதன் முக்கிய சமூக அக்கறைத் திட்டங்கள் பின்வருமாறு:

• டெட்டால் பனேகா ஸ்வஸ்த் இந்தியா பிரச்சாரம், இது மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் தொடர்பான நடத்தைகளை மேம்படுத்துவதற்காக செயல்படுகிறது, இது 2014 இல் தொடங்கப் பட்டதிலிருந்து 116 மில்லியன் மக்களைச் சென்றடைந்துள்ளது.

• டெட்டால் பள்ளி சுகாதாரக் கல்வித் திட்டம், குழந்தைகளுக்கு கை கழுவுதல் போன்ற சுகாதார நடத்தைகளைக் கற்பிக்கிறது மற்றும் 20 மில்லியன் குழந்தைகளுக்கு, வீடு, பள்ளி, சுற்றுப்புறங்களில், தனிநபர் மற்றும் நோயின் போது – ஆகிய ஐந்து முக்கியமான சுகாதார அமைப்புகளைப் பற்றிக் கற்பித்துள்ளது.

• ரீச் ஈச் சைல்டு புரோகிராம் இது ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்த 6,500 குழந்தைகளை இறப்பு மற்றும் நோயிலிருந்து காப்பாற்றியுள்ளது.

• ஹார்பிக் வேர்ல்ட் டாய்லெட் காலேஜ் புரோகிராம், இந்தியாவின் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அதிக பொருளாதார வளம், அதிகரித்த கண்ணியம் மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை வழங்குகிறது, இது 15,800 தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது.

https://www.reckitt.com/sustainability/purpose-led-brands/the-economic-impact-of-reckitt-in-india/

 

Faceinews.com